தாந்தோன்றி ருத்ர ஸ்ரீ சீரடி சாய்பாபா

தாந்தோன்றி ருத்ர ஸ்ரீ ஷிரடி சாய்பாபா வரலாறு



பதினெட்டு எட்டு இரண்டாயிரத்து பதினாறு அன்று வியாழக்கிழமை நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடிய முழு நிலவு குரு பூர்ணிமா அன்று பூமியை பிளந்த படி பாபா அவர் அங்கம் முழுக்க விபூதிகளுடனும் ருத்ராக்ஷை சஞ்சீவினி பிரம்ம தானியம் கோமதி சக்கரம் சிவன் பார்வதி விநாயகர் சிலை வலம்புரி பாலசங்குடன் தோன்றினார். தானாக பூமியை பிளந்த படி பாபா தோன்றியதால் அவருடைய திருநாமம் தாந்தோன்றி ருத்ர ஸ்ரீ ஷிரடி சாய்பாபா என அழைக்கப்படுகிறது. பாபா இங்கு கோரக்கர் ரூபத்தில் அமர்ந்து வைத்தியம் பார்க்கிறார்.

இவ்வாலயத்தில் வரக்கூடிய பக்தர்கள் எப்படிப்பட்ட வியாதியாக இருந்தாலும் முழு நம்பிக்கையுடன் பாபா விபூதியை வாங்கி ஒவ்வொரு நாளும் காலையில் வெறும் வயிற்றில் சகல தோஷங்களும் நிவர்த்தி, சகல சாபங்களும் நிவர்த்தி, சகல ரோகங்களும் நிவர்த்தி என்று மூன்று முறை சொல்லிய பிறகு விபூதியை உட்கொள்ள எப்படிப்பட்ட வியாதியாக இருந்தாலும் நிவர்த்தி ஆகிறது. பாபா இவ்வாலயத்தில் நிகழ்த்தாத அதிசயங்களே கிடையாது.

குலதெய்வ வழிபாட்டை மறந்த குலதெய்வம் கட்டில் இருக்கும் தம் பக்தர்களுக்கு நிவர்த்தி வேண்டி குலதெய்வத்திர்க்கு மட்டுமே கட்டக்கூடிய காணிக்கை முடிச்சை பாபா இங்கு வேண்டுதல் முடிச்சாக கொண்டு வந்திருக்கிறார். அதே போல் தம் பக்த்ர்கள் திருஷ்டி தோஷங்களிலிருந்து காக்க வேண்டும் என்பதற்க்காக துவாரக தேங்காய் என்னும் பரிகார முறையை கொண்டுவந்துள்ளார். அதுமட்டுமன்றி தம் பக்தர்களுக்கு காப்பு அரனாக இருக்க வேண்டும் என்று காப்பு கயிரை கொண்டு வந்தார். இவ்வாலயத்தில் பாம்பாட்டி சித்தர் நாக சதுர்த்தி அன்று சர்ப ரூபத்தில் பாபா பூமியை பிளந்த படி வந்த இடத்தில் பாபா பாதம் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தோன்றி பாபாவின் பாதத்தை வலம் வந்து ஆலயத்தின் உள் வேண்டுதல் முடிச்சியின் மேல் ஏறி பாபாவின் கழுத்தை சுற்றியபடி படம் எடுத்து ஆடியது.

பரிமளத்தூண்
பரிமளத்தூண்
பரிமளத்தூண்
பரிமளத்தூண்
பரிமளத்தூண்
பரிமளத்தூண்
பரிமளத்தூண்
பரிமளத்தூண்
பரிமளத்தூண்
பரிமளத்தூண்

அப்போது தாந்தோன்றி பாபாவின் மீதிருந்து சர்பத்தின்மேல் விபூதி மழை பொழிந்தது. மறுநாள் இவ்வாலயத்திற்க்கு யதி ஒருவர் வந்தார். தானாக தோன்றிய பாபாவை பார்த்து கோரக்கா கோரக்கா என்று கூச்சலிட்டபடி கோரக்கா நீ வந்துட்டியா கோரக்கா நீ வந்துட்டியா என்று கூறினார். அந்த நேரம் காளிமாதாஜி வெளியே வந்தார். யதி காளிமாதாஜியை பார்த்து தாயே இது சக்தி பீடம் சித்தர்கள் கூடம். ஒருவர் வந்துவிடார் ஒருவர் பின் ஒருவராக மற்றவர்கள் வரப்போகிறார்கள் என்று பக்தர்கள் முன்னிலையில் சொல்லியபடி சென்றுவிட்டார். அன்றிலிருந்துதான் இவ்வாலயத்தில் சக்தியின் வெளிப்பாடு தெரிய ஆரம்பித்தது.

எப்படி என்றால் ஒரு நாள் இரவில் இவ்வாலயத்தில் நறுமணத்துடன் கூடிய ஏதோ ஒளி உலாவ ஆரம்பித்தது.என்னவென்று புரியாமல் பார்த்தபோது பாபாவை நோக்கி மல்லிகை மொட்டு போன்று ஒளி வந்து தாமரையாக மாறி பாபாவிற்க்கு ஆரத்தி செய்தபடி இருந்தது. இதை பார்த்த காளிமாதாஜி கோவிலில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் தன் குருவிடம் கேட்டார். இவ்வாலத்தில் சக்தி வீரியத்துடன் இருக்கிறாள். உலக வழக்கத்தில் மறைக்கப்பட்ட மறைந்து விட்ட வழிபாடற்ற மூன்று தேவியர் அவ்வாலயத்தில் தோன்றப்போகிறார்கள் என்று காளிமாதாஜியிடம் அவரது குரு விளக்கம் கூறினார்கள்.

பாபா வந்த ஓர் ஆண்டில் ஆயுர்தேவி அம்பிகை தோன்றினாள். இவ்வாலயத்தில் பாபா வந்த இரண்டாம் ஆண்டு இப்போது ஜேஷ்டா, சதாக்ஷி தோன்றியிருக்கிறார்கள். குரு பார்க்கையில் கோடி நன்மை, குருவருள் இருந்தால் தான் திருவருள் என்று சொல்லக்கூடிய தெய்வத்தின் அருளை பெறமுடியும். பாபா தானாக வந்து தாந்தோன்றி நாமம் கொண்டு மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் கஷ்டங்களையும் போக்க வேண்டி குருவாய் குலதெய்வமாய் தாயாய் அமர்ந்து உலகில் வேறெங்கும் காண கிடைக்காத அரிய தெய்வங்களை கொண்டு வந்து தம் பக்தர்களின் வாழ்க்கையை வளம்பெற வேண்டி அதி அற்புதமான பரிகார ஸ்தலமாக இவ்வாலயத்தை பாபா கொண்டுவந்துள்ளார். இவ்வாலயத்தில் ஒவ்வொரு தெய்வங்களும் காண கிடைக்காத அரிய பொக்கிஷங்கள். கால் எடுத்து வைத்தாலே மாற்றம் என்னும் திரு நாமம் இவ்வாலயத்திற்க்கு உண்டு.