நமது ஆலயத்தில் பாபாவிற்கு ஒவ்வொரு நாளும் சாய் பக்தர்கள் தங்களது திருக்கரங்களாலேயே 138 மூலிகை பொடியை பாபாவின் எதிரில் நின்று சங்கல்பம் செய்து அவரது திருமேனியில் அபிஷேகம் செய்யும் பாக்கியத்தை சாய்பாபா அருளியுள்ளார்.

அபிஷேகம் செய்த பிறகு அபிஷேகம் செய்த பக்தர்களுக்கு பன்னீர் மூலிகை பொடி கலந்த அபிஷேக தீர்த்தமானது தரப்படுகிறது. இத்தீர்த்தம் ஆறு மாதத்திற்கு கெடாமல் உள்ளது. பக்தர்கள் அத்தீர்த்தத்தை தண்ணீரில் கலந்து வீட்டிலோ அல்லது அலுவலகம் மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களில் வெளியில் இருந்து உள் நோக்கி தெளிக்கவேண்டும். பிறகு அவர்கள் தேவையான அளவு தீர்த்தத்தை நீரில் கலந்து குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள எவ்வித பிரச்சனையிலிருந்தும் விடுபடுவதை அனுபவத்தில் காணலாம். மூலிகை பொடி விலை ரூ.50/- ,பன்னீர் மூலிகை அபிஷேக தீர்த்தம் விலை ரூ.25/-