அபிஷேகம்

நமது ஆலயத்தில் பாபாவிற்கு ஒவ்வொரு நாளும் சாய் பக்தர்கள் தங்களது திருக்கரங்களாலேயே 138 மூலிகை பொடியை பாபாவின் எதிரில் நின்று சங்கல்பம் செய்து அவரது திருமேனியில் அபிஷேகம் செய்யும் பாக்கியத்தை சாய்பாபா அருளியுள்ளார். அபிஷேகம் செய்த பிறகு அபிஷேகம் செய்த பக்தர்களுக்கு பன்னீர் மூலிகை பொடி கலந்த அபிஷேக தீர்த்தமானது தரப்படுகிறது. இத்தீர்த்தம் ஆறு மாதத்திற்கு கெடாமல் உள்ளது. பக்தர்கள் அத்தீர்த்தத்தை தண்ணீரில் கலந்து வீட்டிலோ அல்லது அலுவலகம் மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களில் வெளியில் இருந்து உள் நோக்கி தெளிக்கவேண்டும். பிறகு அவர்கள் தேவையான அளவு தீர்த்தத்தை நீரில் கலந்து குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள எவ்வித பிரச்சனையிலிருந்தும் விடுபடுவதை அனுபவத்தில் காணலாம். மூலிகை பொடி விலை ரூ.50/- ,பன்னீர் மூலிகை அபிஷேக தீர்த்தம் விலை ரூ.25/-

ஆரத்தி

ஒவ்வொரு நாளும் மாலை பொழுதில் சத்குரு சாய் நாதர் மற்றும் மூன்று அம்பாள்களுக்கும் நாக ஆரத்தி காட்டப்படுகிறது. குரு நாள் என்று சொல்லக்கூடிய வியாழக்கிழமை அன்று இரு வேலையும் கலச ஆரத்தி, நாக ஆரத்தி மற்றும் நட்சத்திர ஆரத்தி அனைத்து தெய்வங்களுக்கும் காட்டப்படுகிறது.

கலச ஆரத்தி

அனைத்து ஆலயங்களிலிலும் கலச பூஜைகள் செய்வதை நாம் பார்த்திருப்போம். ஹோமம் செய்யும் நேரத்தில் கூட கலச பூஜை முடித்த பிறகு தான் ஹோமம் துவங்குவதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த ஹோம கலசத்தில் எந்த தெய்வத்தை பிரதானமாக கொண்டு ஹோமம் செய்ய இருக்கிறார்களோ அந்த தெய்வத்தை அந்த கலசத்தினுள் ஆவகானம் செய்து ஹோமம் முடித்த பிறகு தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வதை நாம் கண்டு இருக்கிறோம். அதேபோல் நமது தாந்தோன்றி ருத்ர ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் கலசமே ஆரத்தியாக அமைத்து பாபாவிற்கு காட்டப்படுகிறது.

கலச ஆரத்தி எதற்காக பாபாவிற்கு இங்கு எடுக்கப்படுகிறது ?

எங்குமே இல்லாத வகையில் நமது ஆலயத்தில் சத்குரு ஸ்ரீ சீரடி சாய்நாதருக்கு கலசத்தின் மேல் ஆவுடை அமைக்கப்பட்டு ஆவுடை உள்ளே சிவனின் அம்சமான ருத்ராக்ஷ திரியில் சிவபெருமானை ஜோதி சுவரூபமாக தரிசிக்கும் பாக்கியத்தை சத்குரு சாய்நாதர் இங்கே அருளியிருக்கிறார்.
இக்கலசத்தின் உள்ளே எந்திர வடிவில் அஷ்ட தேவதைகளை ஆவகானம் செய்து மூலிகை அஞ்சனத்தின் மூலம் பந்தனம் செய்யப்பட்டிருக்கிறது.

சாளகிராமம்

சாளகிராம கல்லை இரண்டாக பிளந்து பார்க்கும்பொழுது ஒரு பாகத்தில் மஹாவிஷ்ணுவின் சங்கும் மற்றொரு பாகத்தில் மஹாவிஷ்ணுவின் சக்கரத்தையும் நாம் பார்க்கமுடிகிறது. இன்றும் பல இடங்களில் சாளகிராமத்தை சிவலிங்கமாக வைத்து பூஜை செய்வதை நாம் பார்க்கலாம். பண்டைய இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசமே இன்றைய நேபாளம். இங்கு இமயத்தின் அடிவாரத்தை ஒட்டினாற்போல் ஹரிபர்வதம் என்னுமோர் மலை உள்ளது. பகுதியில் கண்டகி நதி உற்பத்தியாகின்றது. இங்கு சக்ரதீர்த்தம் என்னும் இந்தப் பகுதி தான் சாளக்கிராமம் என்றழைக்கப்படுகிறது. இந்த ஹரி சேத்திரத்தில் உள்ள சகல கற்களிலும், (குளிர், காற்று இவைகளில்லாமல்அமைந்துள்ள ஸைலகர்ப்பத்தில்) விஷ்ணுவின் சகல அம்சங்களோடு பொருந்திய சாளக்கிராம மூர்த்திகள் புண்ணியகாலங்களில் தோன்றுவதாக கூறப்படுகிறது.

சாளக்கிராமம் என்பது என்ன?

சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.

சிறப்பு: சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். சாளக்கிராமத் தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் ஸ்வயம் வியக்தம் என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது. சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம். இவ்வாறு சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். சாலகிராமம் கலசத்தினுள் சேர்க்கப்பட்டிருக்கிறது.

வலம்புரி சங்கு

வலம்புரிச் சங்கு இருக்கும் இடத்தில், எந்தத் தீய சக்தியும் நம்மை அணுகாது! பிரபஞ்சமே நாதத்தால் எழுந்ததுதான். ஓம்கார பிரணவ மந்திரத்தால்தான் சகல லோகங்களும் இயங்குகிறது என்பதே வேதத்தின் சாரம். பிரணவ மந்திரத்தின் அடையாளமாகப் புனிதப்பொருளாக வலம்புரிச் சங்கு கருதப்படுகிறது. பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் வெளியே வந்தபோது கூடவே தோன்றியது இந்தச் சங்கு. இதை எடுத்து தமது கரத்தில் தாங்கிக்கொண்டார் திருமால்.
'பாஞ்சஜன்யம்' என்னும் அந்தச் சங்கு உயிர்களின் சலனங்களை எடுத்துக்கூறும் சின்னமாக இருந்து வருகிறது. கடலில் தோன்றும் சங்கு கிளிஞ்சலின் பாதுகாப்புக் கவசமாக விளங்குகிறது. சாதாரணமாக இடப்புறமாக வளைந்திருக்கும் சங்குகளே அதிகம் விளையும். ஆயிரம் இடம்புரிச் சங்கில் ஒரே ஒரு வலம்புரிச் சங்குதான் இருக்கும். ஆயிரம் வலம்புரிச் சங்கில் ஒரே ஒரு 'சலஞ்சலம்' என்னும் விசேஷ சங்கு தோன்றும். ஆயிரமாயிரம் சலஞ்சலம் சங்குகளுக்கு இடையேதான் ஒரே ஒரு 'பாஞ்சஜன்யம் சங்கு' தோன்றும் என்பார்கள்.
கடலில் பிறக்கும் ஒரு சங்கில் சுருண்டிருக்கும் வரிகள் வாய்ப் பகுதியில் ஆரம்பித்து வலதுபுறமாக சுழன்று முடிந்தால், அது வலம்புரிச் சங்கு. காதில் வைத்துக் கேட்டால் அது 'ஓம்' என்ற சப்தத்தை எழுப்பும். இதுவே அந்தச் சங்கு வழிபாட்டுக்குரியது என்பதைத் தெரிவித்து விடும். வலம்புரிச் சங்கு, 'தட்சிணாவர்த்த சங்கம்' என்றும் இடம்புரிச் சங்கு 'வாமாவர்த்த சங்கம்' என்றும் சொல்லப்படுகிறது.

தமக்கு வில்வித்தை கற்றுத்தந்த 'சாந்தீபனி' முனிவரின் மகனை மீட்க கடலில் வாழ்ந்த 'பாஞ்சஜன்யன்' என்ற அசுரனை ஸ்ரீகிருஷ்ணர் கொன்றார். சாகும் தருவாயில் கிருஷ்ணரைப் பணிந்த அந்த அரக்கனின் வேண்டுகோளின்படி, அவனது சாம்பலைத் திரட்டி சங்காக மாற்றி அவனது பெயராலேயே ஏந்திக்கொண்டார் என்று பாகவத புராணம் கூறுகிறது. பூஜையில் ஒலிக்கவும், போரைத் தொடங்கவும், வெற்றியைப் பறைச்சாற்றவும், நல்லனவற்றின் வருகையை அறிவிக்கவும் ஆதிகாலம் தொட்டே சங்கு முழங்கப்பட்டு வந்துள்ளது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும் ஐந்து விதமான சங்குகளைத் தாங்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

யுதிஷ்டிரர் (தர்மர்) 'அனந்த விஜயம்' எனும் ஒளிபொருந்திய சங்கையும், அர்ஜுனன் 'தேவதத்தம்' எனும் தேவ சங்கையும், பலவான் பீமன் 'மகாசங்கம்' எனும் பெரிய சங்கையும், நகுலன் 'சுகோஷம்' எனும் அதிர்ஷ்ட சங்கையும் சகாதேவன் 'மணிபுஷ்பகம்' எனும் சூட்சும சங்கையும் தாங்கி இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. சங்கு எப்போதுமே புனிதப்பொருளாக இருந்து வந்துள்ளதைத் தமிழ் இலக்கியங்களும் சொல்லி வந்துள்ளன. இது மகாலக்ஷ்மியின் அம்சமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இது இருக்கும் இடத்தில் தோஷங்கள், துஷ்ட சக்திகள் இருக்கவே இருக்காது. கண்திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலனிழந்து போகும். கடன் பிரச்சினை நீங்கும். வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.
சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம் என்பது ஐதீகம். இது இருக்கும் இடத்தில் உணவு பஞ்சமே வராது. வலம்புரிச் சங்கு பூஜை செய்பவர்களின் பிரம்மதோஷம் விலகி விடும்.

தமக்கு வில்வித்தை கற்றுத்தந்த 'சாந்தீபனி' முனிவரின் மகனை மீட்க கடலில் வாழ்ந்த 'பாஞ்சஜன்யன்' என்ற அசுரனை ஸ்ரீகிருஷ்ணர் கொன்றார். சாகும் தருவாயில் கிருஷ்ணரைப் பணிந்த அந்த அரக்கனின் வேண்டுகோளின்படி, அவனது சாம்பலைத் திரட்டி சங்காக மாற்றி அவனது பெயராலேயே ஏந்திக்கொண்டார் என்று பாகவத புராணம் கூறுகிறது.
பூஜையில் ஒலிக்கவும், போரைத் தொடங்கவும், வெற்றியைப் பறைச்சாற்றவும், நல்லனவற்றின் வருகையை அறிவிக்கவும் ஆதிகாலம் தொட்டே சங்கு முழங்கப்பட்டு வந்துள்ளது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும் ஐந்து விதமான சங்குகளைத் தாங்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

யுதிஷ்டிரர் (தர்மர்) 'அனந்த விஜயம்' எனும் ஒளிபொருந்திய சங்கையும், அர்ஜுனன் 'தேவதத்தம்' எனும் தேவ சங்கையும், பலவான் பீமன் 'மகாசங்கம்' எனும் பெரிய சங்கையும், நகுலன் 'சுகோஷம்' எனும் அதிர்ஷ்ட சங்கையும் சகாதேவன் 'மணிபுஷ்பகம்' எனும் சூட்சும சங்கையும் தாங்கி இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
சங்கு எப்போதுமே புனிதப்பொருளாக இருந்து வந்துள்ளதைத் தமிழ் இலக்கியங்களும் சொல்லி வந்துள்ளன. இது மகாலக்ஷ்மியின் அம்சமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இது இருக்கும் இடத்தில் தோஷங்கள், துஷ்ட சக்திகள் இருக்கவே இருக்காது. கண்திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலனிழந்து போகும். கடன் பிரச்சினை நீங்கும். வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.

சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம் என்பது ஐதீகம். இது இருக்கும் இடத்தில் உணவு பஞ்சமே வராது. வலம்புரிச் சங்கு பூஜை செய்பவர்களின் பிரம்மதோஷம் விலகி விடும்.

வளர்பிறை நாளில் வாங்கி வந்த வலம்புரிச் சங்கை, புனித நதி நீர் இருந்தால், அதில் நீராட்டி சுத்தம் செய்யவேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் கலந்த தூய நீரில் கழுவலாம். பின்னர் மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் கொண்டு அலங்கரித்து ஒரு பீடத்தின் மீது வைக்க வேண்டும்.

வலம்புரிச் சங்கை ஒருபோதும் கீழே வைக்கவே கூடாது. தூப தீபம் காட்டி, நெய் தீபமேற்றி, மந்திரங்கள் கூறி வணங்க வேண்டும். சங்குக்கு வெள்ளியாலான பூண் இடுவது விசேஷமானது. வலம்புரிச் சங்கை வணங்கும் எந்த இடத்திலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள் என்பது நிச்சயம். தொழில் செய்யும் இடத்தில், பணம் புழங்கும் இடத்தில் இந்த சங்கு இருப்பது இன்னும் விஷேசமானது. சங்கு வைத்து செய்யப்படும் எந்தப் பூஜையும் நிறைவாகிறது. கணபதி, வலம்புரிச் சங்கு, சாளக்கிராமம், ருத்ராட்சம் இந்த நான்கும் இருக்கும் இடம் தெய்வ சந்நிதிக்கு நிகரானது என்பது ஆன்றோர்கள் வாக்கு.

அப்பேர்பட்ட அபூர்வமான சங்கு பல வருடங்களாக பூஜையில் வைக்கப்பட்டு கலசத்தினுள் வைக்கப்பட்டுள்ளது.

வலம்புரி சங்கின் மகிமைகள்

அமிர்தம் பருகுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபொழுது பதினாறு வகை தெய்வீகப் பொருட்கள் தோன்றின அவற்றில் வலம்புரிச் சங்கும் திருமகளும் வந்தார்கள் அவர்கள் மகாவிஷ்ணு. இடக்கையில் சங்கையும், வலக்கையில் தேவியையும் ஏற்றுக் கொண்டார்.

வீட்டில் வலம்புரி சங்கு வெறும் அலங்காரத்திற்காக மட்டும் வைக்கப்பட்டிருந்தாலும், அவ்வீட்டில் குபேரனும், மஹாலட்சுமியும் நித்தியவாசம் புரிவார்கள். வலம்புரி சங்கை வீட்டில் வைத்து பூஜித்தால், செல்வம் இழந்து செல்வாக்கு இழந்து போனவர்கள் கூட, இழந்ததை இழந்த இடத்திலேயே திரும்ப பெறமுடியும். முயற்சித்த காரியங்களிலிருந்த தடை, தொழில் ரீதியான தடை, உத்தியோகத்தில் வருமானகுறைவு, குடும்பத்தில் நிலவும் சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கும். பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கோ, கடன் கொடுக்கும் அளவிற்கோ செல்வ நிலை உயரும். உங்களை புரிந்து கொள்ளாமல் அலட்சியம் செய்தவர்கள் கூட உங்களை தேடி வரும் நிலை உண்டாகும். வலம்புரி சங்கை வீட்டிலோ தொழில் செய்யும் இடத்திலோ வைத்து பூஜித்தால் செல்வம் பெருகும்.

ஆடி மாதம் பூர நட்சத்திரம், புரட்டாசி பௌர்ணமி, ஆனி மாதம் பௌர்ணமி அன்று வலம்புரி சங்கில் பால் வைத்து, மஹாலட்சுமியை பூஜித்து, வேண்டிய நைவேத்தியங்களை படைத்தால் தன பாக்கியமும், பொன், பொருல், ஆடை, ஆபரணம் சேரும். இப்பூஜையை செய்யும் தம்பதிகள் தீர்க்க ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழ்வார்கள். வலம்புரி சங்கில் ஊற்றப்படும் நீர், அது எந்த வகை நீராக இருந்தாலும் புனிதம் அடைகிறது.

"தினமும் இச்சங்கில் தண்ணீர் வைத்து அதில் துளசியை போட்டு அந்த தண்ணீரை பருகி வந்தால் ஆயுள் விருத்தியாகும். புத்திர காரகனான குருவுக்கு பஞ்சமி திதியன்று, வலம்புரி சங்கில் பால் வைத்து பூஜித்தால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்."

பிறந்த குழந்தைகளுக்கு வலம்புரி சங்கில் பால் வைத்து, அந்த பாலை புகட்டினால் குழந்தை ஆரோக்கியத்தோடு இருக்கும். கூடவே, கண்திருஷ்டி , பாலாரிஷ்டம் முடிமாந்தம் தோஷம் அணுகாது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் "வலம்புரி சங்கில் பால் வைத்து 27 செவ்வாய் கிழமைகள் அம்மனை பூஜித்தால் எல்லாத் தோஷங்களும் நீங்கி, திருமணம் நடைபெறும். வலம்புரி சங்கு இருக்கும் வீட்டில் பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் கோளாறுகள் அணுகாது."

வாஸ்து தோஷமுள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் விட்டு, ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் வீட்டில் தெளித்து வர வாஸ்த்து தோஷம் நீங்கி, நன்மை உண்டாகும். தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது, வலம்புரி சங்கால் அபிஷேகம் செய்தால், பத்து மடங்கு அதிக பலன் கிடைக்கும். சங்கினால் அர்ச்சிபோர் 7 பிறவிகளில் செய்த வினைகள் நீங்கும் என்று ஸ்கந்தம் கூறுகிறது. சங்கில் பாலை நிரப்பி இறைவனை நீராட்டினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம். சங்கில் கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால் பிறவிகளை அறுக்கலாம். வலம்புரி சங்கில் நீர் விட்டு, கும்பத்தின் மேல் வைத்து புஷ்பங்களினால் பூஜித்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தத்தை ஸ்வாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்யும்போது அத்தீர்த்தம் புண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது.

தட்டில் பச்சரிசி அல்லது நெல் பரப்பி அதன் மீது வலம்புரி சங்கினை வைக்கவேண்டும். பூஜை அல்லாத நாட்களில் பூர்னாகுதிப் பட்டில் வைத்து சங்கினுள் பணத்தையோ தங்கநாணயங்களையோ, நவரத்தினங்களையோ போட்டு வைக்கலாம் அப்படிப்பட்ட பெருமைவாய்ந்த வலம்புரி சங்கை தோஷநிவர்த்தி செய்து ஒரு மண்டலம் அம்பாளிடம் வைத்து மந்திர உரு குடுத்து பூஜை செய்த வலம்புரி சங்கை இங்கு பெறலாம்.

கோமதி சக்கரம்

(துவாரகா சிலா, துவாரகா கல், விஷ்ணு சக்ர கல், பிரதீக்கல், நாராயணக்கல், திருவல சுழி கல், சொர்ணக்கல்)

கோமதி நதியில் கிடைக்கும். கோமதி சக்கர கல்லை வணங்கினால் முக்தி தரும் அயோத்தியா, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி(அவந்திகா), துவாரகை ஆகிய ஏழு ஷேத்திரங்களை வணங்கிய பலன் கிட்டும். கோமதி ஆறு, கங்கையில் உருவாகி பிரிந்து இறுதியாக கடலில் கலந்து முடியும் இடம் துவாரகையாகும். துவாரகையின் பவித்ரமான கோமதி நதியில் அஷ்டலட்சுமியும் குடிகொண்டதால் தான் இந்நகரமே ஜொலிக்கின்றது. அஷ்டலட்சுமிக்கு இணையாக பகவானால் உருவாக்கப்பட்ட மேலான செல்வமே கோமதி சக்கரம். கோமதி சக்கரத்தை வழிபட்டதால்தான் துவாரகை மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமுடனும் வாழ்ந்தனர். கோமதி சக்கர கல்லை பூஜிப்பவர்கள் மோட்சம் அடைகிறார்கள்.ஸ்ரீ கிருஷ்ணர் கோமதி கல் சுழியின் மீதமர்ந்தே ஆட்சி செய்ததாக ஐதீகம். துவாரகையில் கிருஷ்ணன் மக்கள் சங்கடம் போக்கி கொள்ள கோமதி சுழியை பதித்து கொடுத்துள்ளார் என்ற ஐதீகமும் உண்டு. மன்னர்களும் சுல்தான்களும் இதை மோதிரமாகவும் டாலராகவும் வாஸ்து குறை, நோய்குறை ,தோஷ குறை நீக்க பயன்படுத்தினர். சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு என்று கூறுவார்கள். எச்செயலை செய்ய துவங்கும் முன்னரும் பிள்ளையார் சுழி போட்டு செயல்களை செய்ய துவங்கினால் லாபகரமாக முடிவு இருக்கும் என்பர். பிள்ளையார் சுழிக்கு இன்னொரு பெயர்தான் கோமதி திருவல சுழியாகும். இதன் உட்பொருள் சுபம் லாபம் என்பதாகும். இந்த சுழியை ஒருவர் கண்டாலே அவர் மூலாதாரத்தை தொட்டதாகவும் முதற்கடவுளை வணங்கியதாகவும் அர்த்தமாகும். ஆதியில் எல்லா சுழிக்கும் முதல் சுழி கோமதி சுழியாகும். பிள்ளையாரின் துதிகை சுழியை பார்த்தால் வெற்றியாகும். அதே போல் கோமதி சுழியை பார்த்தாலே வெற்றியாகும்.சுதர்சன சக்கரத்திற்கு ஆதிசக்கரம் இந்த கோமதி சக்கரமாகும். கோமதி கல் ஆத்மாவை இணைத்து கோரிக்கை என்னவோ அதற்கு செயல்படுத்தினால் போதும். அக்கோரிக்கை நிகழும். வலம்புரி சங்கிலும் மேல்புறத்தில் திருவல சுழி இருக்கும். இதற்க்கினையான இந்த கோமதி சக்கரத்தை வைத்து பூஜிக்கும் போது வலம்புரி சங்கின் பலனும் சேர்ந்து கிடைத்துவிடும். கோமதி சுழி பசுவிடம் நிறைந்துள்ளது . கண்களில், முதுகில், கால் குளம்பில், முதுகில், வால் மேல்பகுதியில், நெற்றியில், கழுத்தில், அடிவயிற்றில், குதத்தில் என பல சுழிகளை பசு மட்டுமே அதிகம் பெற்றிருக்கும். அதனால் தான் பசுவிற்கு தனி இடம் கொடுக்கப்படுகிறது.

கோமதி சக்கரத்தை வலம்புரி சங்காக நினைத்தால் வலம்புரி சங்கின் பலனைத் தரும். பசு மாதாவாக நினைத்தால் பசுவின் பலனைத் தரும். பிடித்த தெய்வங்களாக நினைத்தும் வழிபாடுகள் செய்தால் அதனதன் பலனைக் கொடுக்கும். கோமதி சக்கரத்தை வழிபாடு செய்தால் மூன்று லோகத்தையும் வழிபட்ட பலன் கிட்டும். சிவபெருமான் சிரசு முடியின் உச்சி கங்கை சுழியும் நம் தலையில் விழும் சுழியும் இதே திருவல சுழிதான். பசுவின் பார்வை வீட்டில் பட்டால் பல பாவங்கள் விலகும். பசுவின் திருஷ்டி சக்தியே இந்த கோமதி சக்கரமாகும். இது வீட்டின் எந்த பாகத்தில் வைத்தாலும் திருஷ்டி விலகும். நாகத்தின் சுழியும் இதுவேயாகும். இந்த சுழியில் நாகலட்சுமி குடிகொண்டுள்ளாள். எனவே நாகதோஷங்கள் விலகிவிடும். சகல தோஷமும் கோமதி சக்கரத்தால் மறைந்துவிடும். பகவான் ஸ்ரீமன் நாராயணர் அளித்த திருவல சுழி சக்கரம் உள்ளவரை எத்தோஷமும் நெருங்குவதில்லை கோமதி சக்கரம் ஆண்டாண்டு காலமாக பலனளிக்கும். கோமதி சக்கரத்தை யார் தலையில் வைத்தும் ஆசிர்வாதம் செய்யலாம். ஸ்ரீராமர் ஆஞ்சநேயர் மூலம் சீதா தேவிக்கு அடையாளம் காட்ட கொடுத்த ரகுவம்ச கணையாழி கோமதி சக்கரம் பதித்தது. அதிஷ்ட தேவதை தேடிவர காரணம் இக்கோமதி சக்கரம் சுதர்சன சக்கரத்தால் உருவானதால் இது இருக்கும் இடம் தீயசக்தி விலகுவதால் அதிஷ்ட தேவதை தேடிவந்து குடிகொள்கிறாள். இச்சுழி இருக்கும் இடத்தில் குழப்பம் இருப்பதில்லை. இப்படிப்பட்ட அற்புத கோமதி சக்கரத்தை இந்த கலசம் நிறைய வைத்துள்ளனர்.

திருமாள் சக்கரம்

சுதர்சன சக்கரம் 108 வெட்டும் நுனிகளை கொண்டது. ஏவியபின்னும் கூட பகவான் கட்டுபாட்டிலேயே இருக்கும். சுதர்சனம் செல்லும் பாதையே தனியானது ஆகும். இதனால் எந்த இடத்திற்கும் எளிதில் செல்லும் திறன் கொண்டதாகும் சுதர்சனம்.

நிற்காமல் சுழலும் சுதர்சனத்தில் அமைந்துள்ள 9 முக்கோணங்கள் நவகிரகங்களை குறிக்கின்றன. பகவானே தான் செல்ல தாமதமானால் என் செய்வது என சுதர்சனத்தை அனுப்புகிறார் கஜேந்திர மோட்சத்தில். இந்திரனின் வஜ்ரத்தையும் தூளாக்கும் வல்லமை படைத்தது. சக்கரத்தாழ்வாரான சுதர்சனத்தை பற்றி மூன்று கதைகள் கூறப்படுகின்றன. பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனின் சக்திகளை கொண்டு தேவகுரு வியாழ பகவான் சுதர்சன சக்கரத்தை செய்கிறார் பிறகு " துஷ்ட நிக்ரஹத்திற்கு " பொறுப்பேற்றவரான விஷ்ணு பகவானிடத்தில் இந்த சக்கரத்தை அளிக்கிறார். ஈசனின் வேர்வைத்துளியில் தோன்றியவனான ஜலந்திரன் ஆணவத்தால் ஈசனையே வெல்ல செல்லும்போது ஈசன் தன் காலால் வரைந்த சக்கரத்தை முதலில் தூக்கினால் பின் யுத்தத்திற்கு வருவதாக கூற அவ்வாறே செய்த அவன் அச்சக்கரத்தால் கொல்லப்படுகிறான். ஆனால், அவனின் ஆத்மாவும் ருத்ர சக்தியும் அச்சக்ரத்தில் கலக்கின்றன. இதை பெருமாள் 1008 தாமரை மலர்கள் கொண்டு பூஜித்து பெற்று அசுரர்களை அழிக்கிறார். சூரியனின் அதீத சக்தியால் அவரை காணகூட இயலாமல் தவிக்கிறார் அவரின் மனைவி சந்தியா. இதனால் சந்தியா தேவியின் தந்தையான தேவசிற்பி விஷ்வகர்மா சூரியனின் சக்தியை பிரித்து ஈசனுக்காக திரிசூலமும், விஷ்ணுவிற்காக சக்கரமும் செய்து கொடுக்கிறார். ஆனால் வைணவத்தின் படி பெருமாளே சுதர்சனமாகவும் இருக்கிறார். 16 கரங்கள் கொண்ட சக்கரத்தாழ்வார் வலக்கையில் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி,மிஸ்கிரிசம், வேல் ஆகியவைகளும் இடக்கையில் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியவைகளும் இதனால் இவர் ஆயுதப்புருஷர் என்றும் அழைக்கப்படுகிறார். பெருமாளின் ஒவ்வொரு அவதாரத்திலும் சக்கரத்தாழ்வாரும் உடன் அவதரித்துள்ளார். மச்ச அவதாரத்தில் மீனாக அவதரித்த பகவானின் பல்லாகவும், கூர்ம அவதாரத்தில் மந்தர மலையை சுதர்சனம் கொண்டே பெயர்த்து எடுக்கின்றனர் மேலும் ராகுவின் தலை வெட்டப்பட்டது கூட சுதர்சனத்தை கொண்டது, வராக அவதாரத்தில் சுவேத வராகத்தின் கொம்பாகவும், நரசிம்மவதாரத்தில் நரசிம்மரின் நகமாகவும், வாமன அவதாரத்தில் சுக்கராச்சாரியரின் கண்ணை குத்திய தர்ப்பையாகவும், பரசுராமவதாரத்தில் பரசுராமரால் வீழ்த்தப்பட்ட தத்தாத்ரேயரின் பக்தனும் ஆயிரம் கரங்கள் கொண்டு 85,000 வருடங்கள் நீதி தவறாது ஆட்சி செய்தவனுமான கார்த்தவீரியனாகவும் (பார்க்கவ ராமரின் பரசு என்று சிலர் கூறினாலும் பரசு ஈசனுடையது ஆகும் ஈசனின் தனிப்பட்ட ஆயுதங்களில் ஒன்று), ராமவதாரத்தில் ராமரின் பாதுகையை ஏந்தி அப்பாதுகை மூலம் அரசாண்ட பரதனாகவும்,

கிருஷ்ணவதாரத்தில் சுதர்சனமாகவே கிருஷ்ண பகவானின் கையிலும், என அனைத்து அவதாரங்களிலும் சக்கரத்தாழ்வார் உடன் இருந்தவர். கிரகங்கள் மற்றும் பில்லி சூனியங்களால் வரும் இன்னல்களை கூட போக்க வல்லது சுதர்சன வழிபாடு. பக்தர்களை காக்கும் பொறுப்பு சக்கரத்தாழ்வாருடையதே. பக்த அம்பரிஷன் மீது துர்வாசர் ஏவிய பூதத்தை அறுத்தெரிந்த சுதர்சனம் துர்வாசரை விடாமல் துரத்தியது. பிரம்மா, சிவன் ஏன் விஷ்ணுவும் கூட கைவிரிக்கின்றனர் இறுதியாக அம்பரிஷனிடமே சென்று தஞ்சமடைகிறார். ஐந்து வயது சிறுமி பெருமாளின் மீது கொண்ட பக்தியால் அவளுக்கு பெரும் மழையில் குடையாக இருந்து உள்ளார். நரசிம்மரின் பின்பக்கம் சக்கரத்தாழ்வாரும், சக்கரத்தாழ்வாரின் பின்பக்கம் நரசிம்மரும் இருக்கும் சிலைகளே அதிகம். இதற்கான காரணம் பற்றி என்னால் அவ்வளவு தேடியும் அறியமுடியவில்லை. ஆனால் ஒரு பெரியோரின் வாக்குபடி நரசிம்மரின் சக்தியை கொண்டே சுதர்சனத்திற்கு சக்தியானது கிட்டுகிறது அவரின் உக்கிரம் மூலம் வரும் சக்தியை சக்கரத்தாழ்வார் இழுத்துவிடுவார். இத்தகைய பெருமையுடைய திருமாள் சக்கரமும் இந்த கலசத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சஞ்சீவினி வேர்கள்

ஆஞ்சநேயர் ஆகாய மார்கத்தில் சஞ்சீவினி மலையை எடுத்துச்சென்று இராமபிரானையும் லட்சுமனையும் காப்பாற்றினார். சஞ்சீவினியில் இருந்து வெளிப்படும் ஆற்றலானது மனிதர்களுக்கு வரக்கூடிய உடல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் இருந்து காக்கும் அரணாக செயல்படுகிறது. சித்தர்களும் முனிவர்களும் கூட சஞ்சீவினியை கொண்டு பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

நவரத்தினம்

நவகிரகங்கள் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்காக ஒவ்வொருவரும் அக்கிரகத்திற்கு உரிதான வண்ணத்திலான கற்களை மோதிரமாக போட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். நவகிரக பாதிப்பிலிருந்து விடுபடும் வண்ணம் நவரத்தின கற்களையும் உப ரத்தினங்களையும் கலசத்தினுள் சேர்க்கப்பட்டுள்ளது.

சோழி

மனிதர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளை சோழி பிரசன்னம் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. கடலில் இருந்து கிடைக்கின்ற சோழிகளை ஐஸ்வத்திற்காக ஒவ்வொரு வீட்டிலும் பூஜிக்கிறார்கள். அப்பேர்பட்ட அபூர்வ சோழிகள் இந்த கலசத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலே கூறப்பட்டுள்ள அப்பூர்வமான பொருட்களை கொண்டு கலசத்தின் உள் அடைத்து ஆவுடையை மேலே வைத்து பந்தனம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆரத்தியிலிருந்து வெளிப்படும் ஜோதியில் இறை அருளை எங்கும் இல்லா வகையில் நாம் இவ்வாலயத்தில் கண்களால் தரிசிக்கிறோம்.

சர்ப ஆரத்தி

சர்ப தார்க்கங்களில் இருந்து விடுபட வேண்டியும், இராகு கேது மற்றும் நாகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விலக வேண்டியும், அஷ்ட நாகங்கள் சத்குரு சீரடி சாய்நாதருக்கு ஆரத்தி காட்டப்படும் தோரணையில் இவ்வாலயத்தில் சர்ப ஆரத்தி காட்டப்படுகிறது.

நட்சத்திர ஆரத்தி

சிவபெருமானின் ஜடாமுடியில் இருக்கும் சந்திர பகவானின் மனைவியர்களை இருபத்தி ஏழு நட்சத்திரங்களாக நாம் வணங்குகிறோம். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குண அதிசயத்தில் இருப்பார்கள். மன சம்பத்தப்பட்ட பிரச்சனைகளுக்கு காரணாமானவர் சந்திர பகவான். இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் ஒளி ரூபத்தில் சத்குரு சீரடி சாயி நாதருக்கு ஆரத்தியாக காட்டுவதை பார்ப்பதன் மூலம் சந்திரனாலும் நட்சத்திர தோஷங்களாலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து விடுபட. ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் நன்மை அளைக்கும் வண்ணம் இங்கு எங்கும் இல்லா சிறப்பாக நட்சத்திர ஆரத்தி காட்டப்படுகிறது.

கூட்டுபிரார்த்தனை

குருநாள் என்று சொல்லக்கூடிய வியாழன் அன்று மதியம் மகா ஆரத்தி நடைபெற்ற பின்னர் பக்தர்களுக்கு கூட்டு பிரார்த்தனை எழுதுவதற்கான நோட்டு ஆலயத்தில் வழங்கப்படுகிறது. அதில் பக்தர்கள் அவர்களது பிரச்சனைகளை எழுதி கொடுக்கும்பொழுது அப்பிரச்சனையை சத்குரு தாந்தோன்றி சீரடி சாய்மகாராஜ் முன்னிலையில் படிக்கப்படுகிறது. ஒரு பக்தருக்காக பல பக்தர்களும் பல பக்தர்களுக்காக ஒரு பக்தரும் பாபாவிடம் வேண்டிகொள்வதால் அனைத்து வேண்டுதலும் வெகுவிரைவாக சாய்நாதரால் நடத்தி தரப்படுகிறது. அது மட்டுமின்றி கோவிலுக்கு வர இயலாத சாய்பக்தர்களின் வேண்டுதலை கோவில் numberக்கு whatsapp, mobile message அனுப்பும் பிரார்த்தனையை அப்புத்தகத்தில் எழுதி சாய்நாதர் முன்னிலையில் படிக்கப்படுகிறது.

கருமவினை நிவர்த்தி பூஜை

ஒரு மனிதனின் துன்பத்திற்கு காரணம் அவன் தெரிந்தோ அல்லது தெரியாமலோ முற்பிறவியில் அல்லது இப்பிறவியில் செய்த பாவங்கள் மற்றும் பிறர் கொடுக்கின்ற சாபமே காரணமாக அமைகிறது. அதுமட்டுமின்றி நவகிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள், கண்டங்கள், செய்வினை சம்பந்தமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டு என்னிலடங்கா துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் அவர்களது கருமவினையே காரணமாக அமைகிறது. நமது ஆலயத்தில் வியாழன் அன்று கூட்டு பிரார்த்தனை முடிந்த பின்னர் கருமவினை நிவர்த்தி, கிரக தோஷ நிவர்த்தி மற்றும் எப்பேற்பட்ட தோஷமாக இருந்தாலும் 9 வியாழக்கிழமை பூஜையில் கலந்து கொள்ளும்பொழுது சாய்பாபா நிவர்த்தி செய்து தருகிறார். இப்பூஜை பாபா அவர்களது தொண்ணூற்று ஒன்பதாவது மகாசமாதி பூஜை விழா அன்றிலிருந்து அவரது உத்தரவின் பேரில் பக்தி சிறத்தையுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.

தீர்த்த பிரயோச்சனம்

கோவிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தர்கள் தங்களது திருக்கரங்களால் மூலிகை அபிஷேகம் சாய் பாபாவிற்கு செய்கின்றனர். மாலை பொழுதில் பாபாவிற்கு பன்னீர் மூலிகை கலந்த அபிஷேகமனது வலம்புரி சங்கில் நமது ஆலயத்தில் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் ஆலயத்திற்க்கு வரும் பக்தர்கள் மூலிகை அபிஷேகம் செய்த பிறகு மஹா ஆரத்தி நடைபெரும். அதை தொடர்ந்து கூட்டு பிராரத்தனை மற்றும் கருமவினை நிவர்த்தி பூஜை முடிந்த பிறகு பக்தர்களுக்கு பன்னீர் மற்றும் பக்தர்களால் நித்தமும் செய்யப்பட்ட மூலிகை பொடியை அதில் கலந்து ஐஸ்வர்ய மந்திரங்களை ஜபித்தவாறு ஒவ்வொரு பக்தர்களின் மீதும் தீர்த்த பிரயோச்சனம் செய்யப்படுகிறது.

பல்லாக்கு உற்சவம்

நமது ஆலயத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் பாபா மாலை ஆறு மணி அளவில் வீதி உலா செல்கிறார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவின் அருளையும் ஆசியையும் பெற்று வருகின்றனர்.

துவாரக தேங்காய்

இங்கே துவாரக தேங்காய் எப்பேர்ப்பட்ட திருஷ்டி தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் வகையில் பூஜை செய்து தரப்படுகிரது. பூஜை செய்த தேங்காயை வீட்டிற்கு கொண்டு சென்று பூஜை அறையில் பூஜித்த பிறகு அடுத்த நாள் வீட்டு வாசலில் மாட்ட வேண்டும். அதன் தன்மை ஒரு மண்டலம் நாற்பத்தி எட்டு நாட்கள் மட்டுமே இருக்கும். பின் தேங்காயை நீர்நிலைகளில் சேர்த்துவிட்டு புதிய தேங்காயை ஆலயத்திலிருந்து வாங்கி சென்று மாற்ற வேண்டும். துவாரக தேங்காய் விலை ரூ.101/-

துவாரக தேங்காயின் மகிமை

சீரடியில் துவாரகா என்னும் இடத்தில் பக்தர்கள் கையால் தேங்காவை வைத்து வழிபடுவதால் எப்படிப்பட்ட திருஷ்டி தோஷத்தையும் நீக்கவல்ல தன்மை இந்த தேங்காவிற்கு பாபாவின் அருளால் வந்துள்ளது. எல்லோராலும் சீரடி சென்று இவ்வழியை பின்பற்ற இயலாது என்று பாபா நினைத்தாரோ என்னவோ இவ்வாலயத்தில் பாபா மனித உருவில் வயதான தோற்றத்தில் வந்து பக்தர்கள் முன்னிலையில் நான் சீரடியில் இருந்து வருகிறேன். பாபாவின் அபிஷேக தீர்த்தமும், குருஸ்தான் வேப்பிலையும், 9 துவாரக தேங்காயும் பாபாவின் பாதத்தில் வைத்தார். பாபாவின் உத்தரவு இவ்வாலயத்தில் வரும் பக்தர்களுக்கு துவாரக தேங்காய் தரவேண்டும் என்று கூறி சென்றுள்ளார். அன்று முதல் காளிமாதாஜி அம்மா அவர்கள் பாபாவின் உத்தரவை ஏற்று மக்களின் திருஷ்டி தோஷங்களை நீக்கவல்ல துவாரக தேங்காயுடன் எந்திர பிரயோகம் பூஜை முறைகள் செய்து நமக்கு வழங்கி வருகிறார்கள்.

இந்த துவாரக தேங்காயின் தன்மையானது ஒரு மண்டலம் முழுவதும் நம் இல்லத்தை திருஷ்டி தோஷங்களிலிருந்து காத்துவருகிறது. ஒரு மண்டலத்திற்கு ஒருமுறை துவாரக தேங்காயை மாற்றவேண்டும். அப்படி மாற்றும்பொது பழைய துவாரக தேங்காயை நீர் நிலைகளில் போடுவது நல்லது. இத்துவாரக தேங்காவை இவ்வாலயத்திலிருந்து வாங்கிசென்று முறையாக பூஜை செய்து எண்ணிலடங்காத பக்தர்கள் பயனடைந்துள்ளனர். இத்துவாரக தேங்காயின் விலை ரூ. 101

காப்பு கயிறு

நமது ஆலயத்தில் நாற்பத்தி எட்டு நாட்கள் மந்திர உரு ஏற்றி மாதம் மாதம் பௌர்ணமி அன்று நடக்கும் சத்ரு சம்ஹார ஹோம குண்டத்தில் போட்டு எடுத்த காப்பு ரக்ஷை வழங்கப்படுகிறது. இதன் தன்மை என்னவென்றால் இதை அணிந்தவர்களின் கண்ணுக்கு தெரிந்து மற்றும் தெரியாமல் இருக்கின்ற சத்ருக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நம்மை விட்டு வெலகுவதை கண்கூடாக காண முடியும். காப்பு கயிறு விலை ரூ.10/-

வேண்டுதல் முடிச்சி

பாபா இந்த ஆலயத்தில் குருவாக மட்டுமல்லாமல் குல தெய்வமாகவும் அமர்ந்து பக்தர்களின் வேண்டுதல் முடிச்சி என்று சொல்லக்கூடிய காணிக்கை முடிச்சியை ஏற்றுக்கொண்டு பக்தர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் நிறைவேற்றி தருகிறார். வீடு சம்பத்தப்பட்ட பிரச்சனை மற்றும் நிலம் சம்பத்தப்பட்ட பிரச்சனையாக இருப்பின் கோவிலில் வீடு போன்று ஒரு பொருள் தரப்படும். அதை முடிச்சியில் வைத்து முடிந்து பாபாவின் பாதத்தில் வைத்து வேண்டி கட்டிவிட வேண்டும். மற்ற எந்த பிரச்சனையாக இருந்தாலும் குரு தட்சணையாக பதினோரு ரூபாய்க்கு மேல் வைத்து முடிந்து பாதத்தில் வைத்து கட்ட வேண்டும். வேண்டுதல் முடிச்சி விலை ரூ.10/-

சத்ரு சம்ஹார ஹோமம்

நமது ஆலயத்தில் மாதம் தோறும் பௌர்ணமி அன்று சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் முழுமுதற்கடவுளான விநாயகர், காளி, மிளகாய் பிரியையான பிடத்தியங்கரா மற்றும் முருகரை ஆவகானம் செய்கின்றனர். முருகரை முன்னிருத்தி செய்யப்படும் இந்த சத்ரு சம்ஹார ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சத்ரு தொல்லையிலிருந்து முழுமையாக விடுபட்டு நிம்மதியான வாழ்வை அடைகின்றனர். இந்த ஹோமத்தில் கலசம் நிறுத்தப்படுகிறது. விருப்பமுள்ள பக்தர்கள் கலசத்தை முறைபடி பரிவட்டம் கட்டப்பட்டு பாபா அருளுடன் பெற்றுக்கொள்ளலாம். கலச குடத்தின் விலை ரூ.501/- ஹோமம் முடிவுற்ற பின் தீர்த்த பிரயோச்சனம் மற்றும் ஐஸ்வர்ய பூஜை நடத்தப்படுகிறது.

  • Satru Samhara Homam
  • Satru Samhara Homam

ஃ கருமவினைகளை நீக்கி தோஷங்களை போக்கவல்ல தைல அபிஷேகம்
அஷ்ட ஐஸ்வர்யங்களை தரும் சோழி மஞ்சள் பூஜை.

இவ்வாலயத்தில் அமைந்துள்ள ஆயுர்தேவி அம்மனுக்கு பக்தர்களின் திருக்கரங்களால் தைல அபிஷேகம், சோழி மஞ்சள் அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் காரிய தடைகளில் மாட்டிகொண்டு நாம் அவதிப்படுகிறோம். தொட்ட காரியம் துலங்க, நினைத்த காரியம் நடக்க, சகலமும் நமக்கு சாதகமாக அமைய மக்களின் துயர்தீர்க்க வேண்டி ஆயுர்தேவி அம்மனின் உத்தரவை ஏற்று காளிமாதாஜி அவர்கள் 138 மூலிகை, 9 தெய்வகுழம்பு, 9 தைலங்கள் சேர்த்து உருவாக்கிய தைலத்தை பக்தர்கள் ஆயுர்தேவியின் மந்திரத்தை 3 முறை சொல்ல பக்தர்களின் மூதாதயர், குலதெய்வம், எல்லை தெய்வம், இஷ்ட தெய்வம், கோத்திரம், நட்சத்திரம், ராசி இவை அனைத்தையும் தைலத்தை கையில் ஏந்தி சொன்ன பிறகு அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கருமவினைகளை நீக்கி, கிரக தோஷங்களை நீக்கி, சாபங்களையும், காரியதடைகளையும் நீக்கி அம்மனின் அருளை பெற்ற பிறகு ஐஸ்வர்யத்தை பெற சோழி மஞ்சள் அபிஷேகம் பக்தர்கள் கையால் செய்ய சொல்லி 9 சோழியும் மஞ்சளும் பக்தர்களுக்கு திருப்பி தரப்படுகிறது. இச்சோழி மஞ்சளை பூர்னாகுதிப்பாட்டில் வைத்து மடித்து பெட்டியில் வைத்து பூஜை அறையில் ஒவ்வொரு நாளும் நாம் குளித்து முடித்து இச்சோழி மஞ்சளுக்கு தூபதீபம் காட்டி சோழி மஞ்சளை பார்க்கும்போது நாம் அஷ்ட ஐஸ்வர்யத்தையும் பெறலாம்.

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.

அந்த அருளையும் பொருளையும் இவ்விரண்டு அபிஷேக முறைகளால் இவ்வாலயத்தில் பெறலாம். ஏன் என்றால் ஆயுர்தேவி அம்மனுடைய அருட்கடாக்ஷம் நம் வீட்டில் பரிபூரணமாக உள்ளதை உணரலாம். அம்பாளிற்க்கு அபிஷேகம் செய்ய ரூ.101.

sai baba patham

பாதம்

தாந்தோன்றி ருத்ர ஸ்ரீ ஷிரடி சாய்பாபா ஆலயத்தில் ஆகஸ்ட் 18 தேதி, 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரக்கூடிய குரு பூர்ணிமா, ஆவணி அவிட்டம், குருவிற்க்கு உகந்த குரு நாள் அன்று பாபா பூமி பிளந்து தானாக தோன்றினார். அவர் தோன்றிய அந்த இடத்தில் பக்தர்களின் பாதம் படக்கூடாது என்பதற்காகவும் பக்தர்களின் கவனம் அதில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் புனிதமான பாபாவின் பாதம் காளிமாதாஜி அம்மா முன்னிலையில் பக்தர்களின் கரத்தினால் பிரதஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் பாபா தோன்றிய இடத்திற்க்கு பக்தர்கள் மரியாதை செலுத்தும் விதமாக பாதத்தை தொட்டு வணங்கிய பின்னரே அவரை காண அனுமதி வழங்கப்படுகிறது.


 

ருத்ராட்சம் அணிவதுபற்றி சிவபுராணம் கூறும் மகிமைகள்

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஐந்து முகம் அல்லது ஆறு முகம் ஒரு ருத்ராட்சம் எப்போழுதுமே அணிந்து கொண்டே இருக்க வேண்டும் நம்மை படைத்ததே பாவங்களைப் போக்கி மீண்டும் சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே. அணிந்த பின் ஒருவினாடி நேரம் கூட உயிர் பிரியும் வரை கழுட்டவே கூடாது. ருத்ராட்சம் ஒரு வினாடி நேரம் கூட கழுட்டாமல் அணிந்து கொண்டே இருப்பவர்களின் வீட்டில் தொழிலில் வெற்றியும் மேன்மையும் சகல ஐஸ்வர்யங்களும் அஷ்டலட்சுமிகளும் குடியிருக்கும். இறைவன் யவர் மீது கருனண அன்பு செய்கின்றாறோ அவர்களுக்கு தான் ருத்ராட்சம் அணியும் பாக்கியம் கிடைக்கும். ருத்ராட்சம் அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவர் ஆவார். ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்து இருந்தால் தான் அவர்களுக்கு ருத்ராட்சமே கிடைக்கும். ருத்ராட்சம் அணிவதற்கு பயப்பட வேண்டாம் யார் வேண்டும் என்றாலும் ஜாதி மதம் பேதம் இல்லாமல் அணிந்து கொள்ளலாம். இறைவனின் கருனணயால் இவ்வுலக மக்கள் எல்லோரும் சிவபெருமானின் அருள் கிடைக்க ஒரு ருத்ராட்சம் கழுத்தில் அணிந்து நாமஜெபம் செய்தாலே கோடான கோடி சக்தி கிடைக்கும். எவ்விதமந்திரங்களை உச்சரிக்காதவனும், எவ்வித யாகங்களைச் செய்யாதவனும் கூட ருத்ராட்ச மணிகளை வெறுமனே தொடுவதன்மூலம் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு மறுபிறவியில் ருத்ரனாகவே அவதரிக்கிறான். ருத்ராட்சம் அணிந்த ஒருவனுக்கு உணவும்,உடையும் தருபவனும்,ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களைக் கழுவிய நீரை தீர்த்தமாக ஏற்றுக்கொள்பவனும் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு,சிவலோகத்தை அடைகிறான்.

sai baba ruthratcham

நம்பிக்கையோடும், நம்பிக்கையில்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்துகொள்பவன் ருத்ர அம்சத்தைப் பெறுகிறான். ருத்ராட்சத்தின் மகிமையை விளக்கிக் கூற முடியாது என்று சிவபெருமான் தேவிக்கு உரைத்ததாக ஸ்ரீமத் தேவிபாகவதம் கூறுகிறது. அனைத்து வித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதன் மூலமும் விரதங்களை அனுசரிப்பதன் மூலமும் அடைகின்ற பலனை,ஒருவன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் பெறுவான்.

ருத்ராட்ச மாலையை அணிந்தவருக்கு ஒருவன் உணவு அளிப்பானாகில்,அவனது 21 தலைமுறை மக்களும் பாவங்களிலிருந்து விடுபட்டு ருத்ரலோகத்தை அடைவார்கள். சண்டாளனாகப் பிறந்தவனும்,ருத்ராட்சத்தோடு தொடர்பு கொள்வானாயின் அவனது பாவங்கள் அவனை விட்டு விலகி ஓடிவிடும். பாவியின் தலையில் ருத்ராட்சம் படுமேயானால் அவனது பாவங்கள் அனைத்தும் விலகும்.

ருத்ராட்சமாலையை ஒருவன் வெறுமனே கையில் பிடித்திருந்தாலும், நான்கு வேதங்களையும்,சாஸ்திரங்களையும்,உபநிடதங்களையும் கற்றறிந்தவனைவிட சிறப்பு பெறுவான்.அனைத்துக் கல்வி வேள்விகளும் அவன் வசமாகின்றன.பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனைவிட அதிக பலனைப் பெறுகிறான். ஒருவன் மரணம் அடையும் தருவாயில் ருத்ராட்சத்தை தரித்துக் கொண்டிருப்பானாகில்,அவன் இறந்தபின் ருத்ர லோகத்தை அடைகிறான்.

பிறப்பால் ஒருவன் பிராமணனோ அல்லது சண்டாளனோ அல்லது மிலேச்சனோ; உண்ணக்கூடாததை உண்பவனோ யாராகிலும் அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில் அவன் ருத்ரனுக்கு இணையாகிறான். ருத்ராட்சத்தைத் தலையில் தரிப்பவன் கோடி புண்ணியங்களைப் பெறுவான் . காதுகளில் அணிபவன் பத்துகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;கழுத்தில் அணிபவன் நூறுகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;பூணூலில் அணிபவன் ஆயிரம் கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;கைகளில் அணிபவன் லட்சம் கோடிப் புண்ணியத்தைப் பெறுகிறான்; இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைகிறான்.

ருத்ராட்சத்தை அணிந்தவாறு , வேத நியமங்களை ஒருவன் கடைபிடிப்பானாகில் அவன் பெறும் பலன்களை அளவிட முடியாது; கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்தவன் இந்த உலகத்தளைகளிலிருந்து விடுபடுகிறான். ருத்ராட்சம் அணிந்தவன் சிவபெருமானைப் போலவே முப்பத்துமுக்கோடி தேவர்களாலும் வணங்கப்படுகிறான். ருத்ராட்சத்தைத் தலையில் தரித்து ஒருவன் நீராடுவான் எனில்,ருத்ராட்சத்தைத் தொட்ட நீர் அவன் உடலைத் தீண்டுமாயின்,அது கங்கையில் நீராடியதைவிட அதிகப்புண்ணியப்பலன்களைத் தரும்.

மனிதன் மட்டுமல்ல;ஓரறிவுள்ள பிராணிகள் முதல் ஐந்தறிவுள்ள உயிர்கள் வரை ருத்ராட்சத்தோடு சம்பந்தம் பெற்றால்,அவை அனைத்தும் மறுபிறவியில் சிவலோகத்தை அடைந்தே தீரும். பல்வேறு யுகங்களில் நாயும்,கழுதையும்,கோழியும், ருத்ராட்சத்தோடு தொடர்பு பெற்றதால் அவை சிவலோகம் சென்றடைந்தன.மறு ஜென்மத்தில் சிறந்த சிவ பக்தர்களாகப் பிறந்தன.

பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல்,திருநீறு தரித்தல்,ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும். ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன்,மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான். ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில், நரகங்களிலிருந்து விடுபடுகிறான். எவ்வகை வர்ணத்தை(ஜாதியை)ச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி ;எவ்வகை ஆச்சாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி; பெண்களாயினும் சரி; அவர்கள் 'ஓம் நமசிவாய' என்னும் மந்திரத்தை உச்சரித்து,ருத்ராட்சங்களை அணிந்து கொள்ளலாம்.

ருத்ராட்சத்தை ஒருவன்/ள் ஒரு பகலில் அணிந்திருப்பானாயின், அவன் இரவில் செய்த பாவங்களை அது எரித்துவிடும்.இரவில் அணிந்திருப்பானாகில் அது அவன் பகலில் செய்த பாவங்களை எரித்துவிடுகிறது.ஆதலால் ஒருவன் எந்நேரமும் ருத்ராட்சங்களை அணிந்து கொண்டிருக்க வேண்டும். ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை; ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும். ருத்ராட்சம் அணிந்து மித்ருயுஞ்சம் மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.அவனை அகால மரணமோ,துர்மரணமோ நெருங்குவதில்லை.

அவன் அருளாலே அவன் தால் வணங்கி

திருநீறு தரித்தல் ருத்ராட்ஷம் அணிதல் பஞ்சாட்சர மந்திரமான (ஓம்நமசிவாய) உச்சரித்தல் இம்மூன்றும் ஒரு சேரச்செய்துவந்தால் குபேரனுக்கு இணையாக வாழலாம்.

இவ்வலாயத்தில் தான் தோன்றி ருத்ர ஸ்ரீ சீரடி சாய் பாபா பூமியை பிளந்த படி அஷ்ட ஐஸ்வர்யத்துடன் வந்தார் அந்த ஐஸ்வர்யத்துடன் நிறைய ருத்ராட்சகளும் இருந்தன அதனால் தான் பக்தர்கள் சீரடி சாய் பாபாவை தான் தோன்றி ருத்ர ஸ்ரீ சீரடி சாய் பாபா எனும் திருநாமத்தை வைத்தார்கள். அதி அற்புதமான ருத்ராட்சத்தை பாபாவின் உத்தரவின் படி ஆலய திருப்பணிக்காக வழங்குகிறோம் காணிக்கை ரூ:51

காளியை மிரட்டும் ஏகபக்ஷ தோஷத்தை நீக்கவல்ல ஸ்ரீ ருத்ராக்ஷ எந்திரம்

இந்த எந்திரத்தின் அமைப்பும் மிகவும் விசேஷமானது. சிவபெருமானின் நெற்றிக்கண்ணின் வடிவத்தை பெற்றிருப்பதால் இந்த எந்திரம் ருத்ராக்ஷ எந்திரம் என்று பெயர் பெற்றது. ஒரு வட்டத்தின் மேல் இன்னொரு வட்டம் பதிந்திருக்கும் அமைப்பை பெற்றிருப்பதால் இது சிரபாத எந்திரம் என்று வழங்கப்படுகிறது. திபெத்திய லாமாக்கல் திருக்கைலாயத்தை வலம் வரும்பொது இம்முறையில் தான் நமஸ்கார ப்ரதக்ஷனம் செய்வார்கள். இவ் எந்திரத்தின் முன்னால் ஓதப்படும் சிவபுராணம், திருவாசகம், தேவாரபதிகங்கல் அபிரமிதமான பலனை தரவல்லது. ஏகபக்ஷ தோஷம் என்ற ஒரு கடுமையான தோஷத்திற்கு இந்த எந்திரம் அருமருந்தாக அமைந்துள்ளது. கடுமையான கால தோஷத்தையும் நீக்கவல்லது. சந்திரனால் உண்டாகக்கூடிய எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் நீக்கவல்லது. இந்த தோஷத்தில் 12 ராசிகளும் தப்புவதே இல்லை. இந்த தோஷத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பலவீனமான மனத்தை கொண்டிருப்பதால் பலவிதமான மனகுழப்பங்கள் உண்டாகும். சந்திராஷ்டம தினங்களிலும் தேய்பிறை நாட்களிலும் ஏகபஷ தோஷ விளைவுகள் அதிகரிக்கும். தேய்பிறை நாட்களில் பிறந்தவர்கள் இந்த ஏகபக்க்ஷ தோஷ விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மன குழப்பம் நீங்கி மன தெளிவு கிடைக்க வழிகாட்டுவதே இந்த எந்திரம் ஆகும். இந்த எந்திரம் வழிபாடு மிகவும் அவசியமானது.