சந்தி வழிபாடு

சந்தி, பைரவி, காளி

நமது ஆலயம் நேர்த்தெருக்கூத்து மற்றும் முற்சந்து கொண்ட எல்லையில் அமைந்துள்ளது. மூன்று சந்துகள் கூடும் இடமே முற்சந்தி இவ்விடத்தில் துற்சத்திகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பார்கள் பெரியோர்கள். அவ்விடத்தில் தான் மிகவும் சக்தி வாய்ந்த சந்தி அம்மாள் வீற்றிருப்பாள். கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி வீதிஉலா செல்லும்போது முற்சந்தி இடங்களில் நின்றுவிடுவர். அவ்விடத்தில் சந்தி அம்மனுக்கு பூஜை நடைப்பெற்ற பின் தான் சுவாமி வீதிஉலா செல்வார். நமது ஆலயத்தில் சந்தி அம்மனை உருவ வழிபாடு இல்லாது அருவ வழிபாடாய் சந்திகல் வடிவில் பிரதஷ்டை செய்யப்பட்டுள்ளது.

எல்லை கல்லில் வீற்றிருப்பவளாம் பைரவி. தன் எல்லயில் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு பாதுகாப்பாய் நிற்ப்பவள். பிறை நிலவு மற்றும் நெற்றிக்கண்ணுடன் அழகிய தோற்றத்துடன் சூலமாய் வீற்றிருக்கிறாள்.

கருணையின் கடலாய் வணங்கப்படும் குழந்தையின் உள்ளம் கொண்ட கேட்டதை தரவல்ல தட்சண காளி அம்பிகையை கருப்பு மார்பில் கல்லினால் பிரதஷ்டை செய்துள்ளனர்.

காளி, பைரவி, சந்தி இம்மூன்று தேவியரும் ஒருசேர நமது ஆலயத்தில் வீற்றிருக்கும் சூலத்தின் முன் நின்று தேவகனி என்று சொல்லக்கூடிய மந்திர உரு ஏற்றிய 3 எலுமிச்சை பழத்தை பக்தர்களின் துயர் நீக்க வேண்டி தரப்படுகிறது. நம்முடைய சத்ரு யாராக இருந்தாலும் பழத்தை வைத்து சங்கல்பம் செய்து நமது குறைகளை சொல்லி சூலத்தில் குத்தும்போது அந்த சமயத்திலிருந்து எப்படிப்பட்ட சத்ரு தொல்லையிலிருந்தும் விடுபடலாம். இந்த வழிபாடு முறை எந்த ஒரு ஆலயத்திலும் இல்லாத அதி அற்புதமான முறையாகும்.