ஸ்ரீ ஆயுர்தேவி மகிமை

மக்கள் சேவையே மஹேஸன் சேவையெனத் தியாகம் புரிந்த அருட்பெருஞ் சித்தர்களையும், மஹரிஷிகளையும் தம் எண்கரங்களில் ஏந்தி அருள் பாலிக்கின்றாள். அவள்தம் ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாகும். பொதுவாக சித்த புருஷர்களின் திரூஉருவத்தைக் கோயில் தூண்களில்தான் காணலாம். ஸ்ரீ ஆயுர்தேவியை வழிபட, ஸ்ரீ பராசக்தியோடு, சித்த புருஷர்களையும் நமஸ்கரிக்கும் பேறு கிட்டுகிறது. ஸ்ரீதேவி (சாக்த) உபாசனையில் உன்னதம் பெற்றவர்கள் சித்த புருஷர்களே! தம் அடியார்களை வணங்கினால் மகிழும் ஸ்ரீ ஆயுர்தேவி, என்றும் எங்கும் எப்போதும் சிவ சித்தத்தில் திளைக்கும் சித்தர்களின் மூலம் பக்தர்களுக்குப் பரிபூர்ணமாக அருள் புரிவதில் பேரின்பங்கொள்கிறாள். எனவே ஸ்ரீ ஆயுர்தேவி வழிபாடு மனித குலத்தின் அனைத்து துன்பங்களுக்கும் நிவாரணமளிக்கும் ஒரு சம்பூர்ணமான வழிபாடாகும்.

வலதுகரம் [மேலிருந்து கீழ்]:

  • 1. கயாஸூர மஹரிஷி
  • 2.ஆணி மாண்டவ்யர்
  • 3. அத்ரி மஹரிஷி
  • 4. குண்டலினி மஹரிஷி

இடது கரம் [மேலிருந்து கீழ்]:

  • 1. அஹிர்புத்ன்ய மஹரிஷி
  • 2. சாரமா முனிவர்
  • 3. அஸ்தீக சித்தர்
  • 4. கார்க்கினி தேவி, சம்வர்த மஹரிஷி

எட்டாவது கரத்தில் அமர்ந்துள்ள கார்க்கினி தேவி ஸ்ரீ ஆயுர்தேவியின் அருளால் அமுதக் கலசமாக மாறி அருள் புரிபவள். இக்கரத்திலேயே ஸ்ரீசம்வர்த மஹரிஷியும் கலசத்தினுள் அமர்ந்து அருள்பாலிக்கின்றார். உலகின் அனைத்து ஜீவன்களின் எல்லாவிதமான சுகதுக்கங்களும் இந்த ஒன்பதில் அடங்கி விடுகின்றன. துன்பங்களையும், துக்கங்களையும் நிவர்தி செய்ய வேண்டும் என்பதே தற்போதைய பொதுப் பிரார்த்தனை ஆக்கிவிட்டது. இது கருதியே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கேற்பவே நவக்கிரக தெய்வங்களை இறைவன் படைத்தான். அவரவர் கர்மவினைகளுக்கேற்ப இகபர சுகங்களை நவக்கிரகாதிபதிகள் கணிக்கின்றனர் ” ஒன்பதாவதாக உள்ள கரமே அபய ஹஸ்தம். இதன் உட்கரத்தில் ஸ்ரீ சக்கரத்திற்கு ஒப்பான “தீபிகா பிம்ப சக்கரம்” அமைந்துள்ளது. இச்சக்கரத்தின் பிந்து ஸ்தானத்திலிருந்து நறுமண தூபப் புகை எப்போதும் படர்ந்து பிரபஞ்சத்திலுள்ள அனைத்துக் கோடி லோகங்களுக்கும் ஊடுருவிச் செல்கிறது.

இந்த தூபக் கதிரே உலகின் அனைத்து ஜீவன்களின் சிருஷ்டி, கர்ம பரிபாலன்ங்களை நிர்ணயிக்கின்றது. நித்ய ஜீவசக்தியை அளிக்கின்றது

அற்புதத் தோற்றம்

நவ கரங்களை உடைய ஸ்ரீ ஆயுர்தேவி சிவாம்சம் பூண்ட ஆதிபராசக்தி, வல இடப்புறங்களில் நான்கு கரங்களை கொண்டவள். ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாக விளங்குகிறது.

எட்டு கரங்களிலும், ஒன்பது சித்தர்கள் மஹரிஷிகள் கலியுக மக்களின் பல்வேறு வகையான துன்பங்களைக் களைவதற்கெனப் பல அற்புதமான தவங்களைப் புரிந்து தெய்வாவதாரங்களிடமிருந்து பெற்ற வரங்களையும் சாந்தமான முறையில் எதிர்த்துச் சித்த புருஷர்களின் அருட் பெருந்தவத்தால் அவற்றைக் களைவதோடு மட்டுமின்றி தீவினைகள் மீண்டும் அணுகா வண்ணம் பல பிராயச்சித்த முறைகளையும் அவர்கள் மூலம் அருள்பவளே ஸ்ரீ ஆயுர்தேவி!!

ஒன்பதாவது கரமான அபயஹஸ்தத்தில் சாட்சாத் பரமசிவனே குடிகொண்டு அம்பிகையின் தோற்றத்தையும், அவளுடைய எண்திருக்கரங்களில் அமரும் பேறு பெற்ற கோடானு கோடி சித்த புருஷர்களின் தவப்பெரு நிலைகளையும் எடுத்துரைக்க, ஸ்ரீ நந்தீஸ்வரர் அவற்றைப் பல இலட்சம் கிரந்தங்களாக இன்றைக்கும் எழுதித் தொகுத்து வருகிறார்.

திருவிடைமருதூரில் சிவபெருமானுக்கு நந்தியாகச் சலாலகன் என்ற நந்திஸ்வரர் அறக்கடவுள் அமர்ந்துள்ளார். பலகோடி ஆண்டுகள் தவம் புரிந்து இத்தகைய அரிய பேற்றைச் சலாலகன் பெற்றார் எனில் ஸ்ரீ ஆயுர் தேவிக்கு அன்ன வாகனமாகவும், இரண்டு சிம்ம பீடங்களாகவும் அமைந்துள்ளோர் எத்தகைய தவப்பெருநிலையை அடைந்திருக்க வேண்டும்!! ஸ்ரீ ஆயுர்தேவியின் அன்னவாஹனமான சுவாரோஸிஷன் என்னும் மஹா தபஸ்வி ஸ்ரீமன் நாராயணனை உபாசித்து மஹரிஷியானவர். அவர் ஸ்ரீ மஹா விஷ்ணுவையே சாட்சாத் சிவபெருமானாக எண்ணித் தரிசனம் பெற விழைந்த போது, “தேவி உபாசனை மூலமாகவே எம்மை ஸ்ரீ சிவபெருமானாக வரித்துத் தரிசனம் செய்ய இயலும்” என்று ஸ்ரீ பெருமாள் அருளிடவே சுவாரோஸிஷ மஹரிஷி ஸ்ரீதேவி உபாசனையில் திளைத்து அன்னவாகனமாக அமையும் பேறு பெற்றார்.

ஒன்பதின் தத்துவம்

ஒவ்வொரு மனிதனின் தேகத்திலும் ஒன்பது துவாரங்கள் உள்ளன. நாசி துவாரங்கள் வழிச் செல்லும் சுவாசத்தை முறைப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தும் வாசிகலைத் தத்துவத்திற்கு “பிராணாயாமம்” என்று பெயர் இதன் விளக்கங்களைப் பலரும் அறிவர்.

நாசிகள் தவிர ஏனைய ஏழு துவாரங்களிலும் சுவாசம் உண்டு சிவாம்சம் பரிபூரணமாக நிறைந்திருப்பவள் ஆதலின் – பரம்பொருள் வழிபாட்டையும்,

1. நவக்கிரக தத்துவம் விளக்கும் ஒன்பது வகையான இகபர சுகங்களைத் தருபவளாதலால் – நவக்கிரக வழிபாட்டையும்,
2. சகல ஐஸ்வர்யங்களையும் தந்து காத்து ரட்சிப்பதால் – ஸ்ரீ லக்ஷ்மி நாராயண வழிபாட்டையும்,
3. அதி அற்புத சித்த புருஷர்களும், மகரிஷிகளும் அருட்பெரும் தவத்தால் அருளியுள்ள பரிகார முறைகளால் ஒன்பது வகையான துன்பங்கள் நிவர்த்திக்கின்ற முறையையும் தந்து சற்குருமார்களின் வழிபாட்டையும் ஒருங்கே தருவதால் ஸ்ரீ ஆயுர்தேவி வழிபாடு, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தேவியின் – ஸர்வ தெய்வ சம்பூர்ண வழிபாடாக அமைகிறது.

ஸ்ரீ சித்திரகுப்த தேவர்

ஒருமுறை சித்ரகுப்தர் பலகோடி ஜீவன்களின் தலைவிதிக்குரித்தான கர்ம வினைகளைக் கணக்கெழுத, அவற்றுள் பெருமளவு தீவினைகளாக இருப்பது குறித்து மனம் வருந்தி ஸ்ரீ பாலினன் தம் தலையில் குட்டிக் கொள்ள அவருக்கு தீராத தலைவலி வந்து விட்டது. இதனால் அவர் மேலும் பணிபுரிய இயலாது திகைத்திட, கர்மங்களின் தேக்கத்தால் சர்வ லோகங்களும் ஸ்தம்பித்தன.

சித்ரகுப்தர் பதறி எழுந்து ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டிட, அவர் நம் இடைகச்சையையே ஸ்ரீ பாலினன் சித்ரகுப்தனின் தலைக் கிரீடமாக்கிட தீராத தலவலியும் நின்றது.ஸ்ரீ தர்ம ராஜாவாகிய கால மகா பிரபு ஸ்ரீ ஆயுர்தேவியை வணங்கும் தாத்பர்யம் அணுவினும் சிறிய கிருமிகள் முதல் பெரிய பிராணிகள், தேவர்கள், கந்தர்வர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவன்களின், தேவாதிதேவரின் கால முடிவை இறை நியதிப்படி பரிபாலிப்பவரே ஸ்ரீ எமதர்மராஜாவாகிய ஸ்ரீ கால மகாபிரபு”பூலோகத்தில் மக்கள் “எமபயம் நீங்க” மந்திரங்களைச் சொல்லி வழிபாடுகளையும் நிகழ்த்துகின்றனர்.

இந்த மனோநிலையைச் சற்று விருத்தி செய்து, எமபயம் நீங்குவதைவிட தங்களுடைய பூஜைகளும், ம்ருத்யுஞ்ஜய ஹோமங்களும், தான தருமங்களும், இறையருளால் ஆயுளை விருத்தி செய்கின்றன என உணருவது சத்தியமானதாகும். ஸ்ரீ சுதர்மனன் என்ற ஸ்ரீ காலமகாப்பிரபுவும் அவர் பத்தினி தெய்வமாகிய ஸ்ரீ சுதர்மிணியும் ஆவர்.

சுமங்கலி பாக்கியம்

கலியுகத்தில் ஒவ்வொரு குடும்பப் பெண்ணும் தீர்க்க சுமங்கலியாக வாழ விரும்புகிறாள். அவளுடைய பூஜை முறைகளும், கற்புத் தன்மையும், பெரியோர்க்கு பணிவிடை செய்தலும், அவள் கணவனின் ஆயுளை விருத்தியடையச் செய்யும். இத்தகைய குணங்களை உடைய பெண்மணிகளுக்கு மாங்கல்யப் பிராப்தத்தையும், சுமங்கலித் தன்மையையும் இறையருளால் மேற்கண்ட ஸ்ரீ சுதர்மிணி சமேத ஸ்ரீ காலமகா பிரபுவே மனமுவந்து அருளி அருள்பாலிக்கின்றனர். சில குடும்பங்களில் பித்ரு சாபங்களாலும் பித்ரு காரியங்களைச் சரிவர செய்யாததாலும் ஏற்படுகின்ற அகால ம்ருத்யு தோஷத்தால் நேரிடும் இள வயது மரணங்கள், திடீர் மரணங்கள், விபத்துக்கள், இளம் விதவைக் கோலங்கள், சிசு மரணங்கள் போன்ற பெருந் துன்பங்களை ஸ்ரீ கால மகா பிரபு நீக்கி, ஸ்ரீ ஆயுர்தேவி அனுக்கிரகத்தால் நல்வழி காட்டுகின்றார்

ஸ்ரீஆயுர்தேவி வலது முதல் கரம்

ஸ்ரீகயாசுர மகரிஷி

பித்ரு சாப நிவர்த்தி

கலியுகத்தில் மக்களுடைய பெரும்பான்மையான துன்பங்களுக்கு மூல காரணம் அவர்கள் தங்கள் பித்ருக்களுக்குரித்தான கடமைகளை நிறைவேற்றாததே ஆகும். தானம், தர்ப்பணம், சிராத்தம் போன்ற பித்ரு கடன்களை மனப் பூர்வமாகச் செய்பவர்களும், ஆத்மார்த்தமாகச் செய்து வைப்பவர்களும் அருகி விட்டனர். ஊதியத்திற்கேற்ப ஓதுவதே மந்திரம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இவற்றைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்க தரிசனமாக அறிந்த ஸ்ரீ கயாசுர மகரிஷி, கலியுக மக்களைப் பித்ரு சாபங்களிலிருந்து மீட்கும் பொருட்டு ஸ்ரீமாதேவியை நோக்கி தவமிருந்தார்.

கயா ஸ்தலபுராணம்

கோடானு கோடி யுகங்கள் தவமிருந்து ஸ்ரீ கயாசுர மகரிஷியின் தன்னலமற்ற தவப்பெரு நிலையைக் கண்டு அதிசயித்தனர் தேவர்கள். அவர்கள் கயாஸுர மகரிஷியை அணுகி “தங்கள் அற்புத தவத்தால் ஸ்ரீமாதேவி தங்களுக்கு அருளும் முன், எங்களால் இயன்ற தொண்டைத் தங்களுக்கு அர்ப்பணிக்கின்றொம்” என்றனர். ஸ்ரீ மாதேவியின் அருளால் அவர்களுடைய வினயத்தை அறிந்து கொண்ட மகரிஷி, “நீங்கள் அனைவரும் என் அங்கத்தில் இடம் பெற்று வாழ்த்தியருள வேண்டும்!” என்று வேண்டினார்.”

“சற்குருவே! முப்பத்து முக்கோடி தேவர்கள் குடிபுகும் தேக அமைப்பை ஸ்ரீ கயாஸுர மகரிஷி கொண்டார் என்றால் எத்தகைய தவநிலையை அவர் மேற்கொண்டிருத்தல் வேண்டும்! கயாசுர ஸ்ரீ மாதேவியின் பரிபூரண அருளை பெற்றவர் அல்லவா! அமிர்தம் அருந்திய முப்பத்து முக்கோடி தேவர்களின் வாசத்தால் ஒருமித்த சஞ்சீவ ஸ்திர வாழ்வை ஸ்ரீ மாதேவியின் கருணயால் பெற்ற ஸ்ரீ கயாஸுர மகரிஷி, விண்ணகத்து நெடிது வளர்ந்த கல்லால மரம் போல் தேவாதி தேவரின் சரீரங்களோடு பூமியில் புதையுண்டார். அதுவே இன்றைக்கும் கோடிகோடியான ஜீவன்களின் பித்ரு சாபங்கள் நிவர்த்திக்கும் “கயா” புனித பூமியாகும். அவர்தம் புனித தேகத்தில் எழுந்த புண்ணிய ஸ்தலமே கயா.

தலைமுறை தலைமுறையாக மனிதர்கள் வளர்த்து வந்த பித்ரு கடன்கள், முப்பத்து முக்கோடி தேவர்களின் திருவருளாலும், ஸ்ரீ மாதேவியின் பரிபூரண அனுக்ரகத்தாலும், ஸ்ரீ கயாசுர மகரிஷியின் அருந்தவத்தாலும் கயா பூமியில் இடும் பிண்ட, தர்ப்பணத்தால் நொடியில் தீர்கின்றன ஸ்ரீ கயாசுர மகரிஷி இன்றைக்கும் அருள் பாலிக்கும் கயா திருத்தலத்தையே, பிரம்மா தம் சிருஷ்டிக்கான பிரம்ம யாகத்தை நடத்தத் தேர்ந்தெடுத்தார். பித்ரு தேவர்களின் அதிபதியான ஸ்ரீ மகாவிஷ்ணு கயாசுர மகரிஷியின் இருப்பிடமான கயா ஸ்தலத்தையே “ ஸ்ரீ விஷ்ணு உதயஸ்தானமாக ஏற்று தம் ஸ்ரீ விஷ்ணு பாதங்களைப் பதித்தார். கயாஸுர மகரிஷியின் திருமார்பில்தான் ஸ்ரீ விஷ்ணுவின் திருப்பாதங்கள் தரிசனம் அளிக்கின்றன. இவ்வாறாக கயா பூமியைப் பித்ரு தேவர்களின் தெய்வீக பூமியாக, ஸ்ரீ விஷ்ணு பாத ஸ்தலமாக மாறப் பெரும் தவம் புரிந்தவர் ஸ்ரீ கயாஸுர மகரிஷியே இவ்வாறு அற்புதத் தவங்கள் புரிந்து தன்னலமற்ற மக்கள் சேவை செய்து ஸ்ரீ ஆயுர்தேவியின் வலது முதல் கரத்தில் இடம் பெற்றார் கயாஸுர மகரிஷி ,கயாவின் பெருமைக்கு காரணம் மஹரிஷி காயவுக்கு சென்றால் கூட அவரை காண இயலாது,

ஸ்ரீ ஆயுர்தேவி கோயில்

ஸ்ரீ ஆயுர்தேவிக்குக் கோயில்கள் எழுப்பலாகுமா?

“ஸ்ரீ அம்பாளின் விருப்பம் அதுவாயின் எதுவும் நடக்கும். எனினும் எம் பரம்பரையோன், எம்முடைய கிரந்தகளிலிருந்து எடுத்தருளியுள்ள ஸ்ரீ ஆயுர்தேவி மூலமந்திரம் குறிப்பிட்ட எண்ணிக்கை வரை உச்சாடனம் [ஜபம், பாராயணம்] செய்யப்படவேண்டும்.

ஸ்ரீ ஆயுர்தேவிக்கான காயத்ரி மந்திரம் குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு தியானிக்கப்படவேண்டும்.அதன்பிறகு யாம் அளித்துள்ள ஸ்ரீ ஆயுர்தேவி ஹோமங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைய்யில் நிகழ்த்தப் பெறவேண்டும் என்று ஓர் ஆவாஹன அளவுகோல் உள்ளது.

எந்த தெய்வத்திற்கும் ஒரு கோயில் அமையும் முன் இத்தகைய ஆன்மீக குறியீட்டு இலக்கணங்கள் உண்டு. அவை முற்றுப்பெறும் போது ஸ்ரீ ஆயுர்தேவியே தானாகக் கோயில் கொண்டு அருள் பாலிப்பாள்!” எனினும் ஸ்ரீ ஆயுர் தேவிக்கு கோயில் எழுப்புவதற்கான மனிதப் பிரயத்தனங்கள், முயற்சிகள் மேற்கொள்வதில் தவறில்லை. ஸ்ரீ அம்பிகை விரும்பும் போது அது தானே கைகூடும்.”

ஸ்ரீ ஆயுர் தேவியின் இரண்டாவது வலகரத்தில் அமரும் பேறு பெற்ற ஸ்ரீ ஆணிமாண்டவ்யர் எவ்வாறு இந்த அனுக்ரகம் பெற்றார்?

அகஸ்தியர்

“ஸ்ரீ ஆணிமாண்டவ்யரின் சரிதத்தை பிறிதோரிடத்தில் விளக்கியுள்ளோம். அவர் “ஸ்ரீ விதாத்ரி தேவி” என்னும் அம்பிகையைத் துவிதியை திதிதோறும் வழிபட்டு வந்தார். இத்திதியில் ஸ்ரீ விதாத்ரி தேவி நூறு மகாலக்ஷ்மி தேவியரின் அனுக்ரகத்தை ஒன்றாகத் திரட்டியருளும் சக்தியுடையவள்.

ஸ்ரீஆயுர்தேவி இரண்டாவது வலகரம்

ஸ்ரீஆணி மாண்டவ்ய மகரிஷி

ஸ்ரீ மாண்டவ்ய மகரிஷி அற்புத தவங்கள் புரிந்து அதன் பயனை மக்களுக்கு அர்ப்பணித்து சேவை செய்த உத்தம மகரிஷியாவார். ஒரு முறை அவர் ஆழ்ந்த தியானத்திலிருந்த பொழுது அந்த வனத்தில் அரசக் காவலர்களால் துரத்தப் பெற்ற கொள்ளையர்கள் இவருடைய ஆஸ்ரமத்தில் நுழைந்து ஒளிந்து கொண்டனர். மகரிஷியின் அருகில் ஆயுதங்கள் கிடப்பதைக் கண்ட சேவகர்கள் “இவரே கொள்ளைக் கூட்டத் தலைவர்” எனத் தவறாக கருதி அவரைச் சிறையிலிட்டனர். தீர விசாரிக்காத அரசரும் அவரைக் கழுவிலேற்ற மூன்று தினங்கள் ஆகியும் யோகத்தில் திளைத்துத் தேஜோ மயமான காந்தியுடன் பிரகாசித்த அவரைக் கண்டு அஞ்சி, “இவர் மகா தபஸ்வியே” என்று எண்ணித் தம் மக்களுடன் அவரைச் சரணடைந்து மன்னிப்புக் கோரினார்.

மக்கள் தம் அறியாப் பருவத்தில் செய்கின்ற தவறுகளுக்குப் பிராயச்சித்தங்களை அவர் வேண்டிட “ஸ்ரீ விதாத்ரி” என்னும் தேவி பிரசன்னமானாள். அது முதல் அவர் ஸ்ரீ விதாத்ரி உபாசனையைத் தீவிரமாக மேற்கொண்டார். அதன் காரணமாக அவர், குழந்தைகளுக்கான பரிகாரங்கள்

1. பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், சகல உடல் வியாதிகள், கண்ணேறு வியாதிகள் இவற்றிற்கான காரணமும் பரிஹாரங்களும்.
2. சிறுபிள்ளைகளுக்கான வியாதிகள், திருஷ்டிகள், சாபங்கள்
3. குழந்தைகளைப் பேணும் முறைகள், கல்வி, வீரம், இசை, ஞானம் உள்ளிட்ட பல சிறப்புகளைப் பெறுதல் போன்ற விஷயங்களை ஆராய்ந்து குழந்தைகளுக்கும், பாலர்களுக்கும் உரித்தான தெய்வீகமான வாழ்வைப் பெற்றுத் தருவதற்கு ஆற்ற வேண்டிய பரிகாரங்களையும், நிவர்த்திகளையும் அருளியுள்ளார்.

ஸ்ரீஆயுர்தேவி மூன்றாவது வலகரம்

ஸ்ரீஅத்திரி மகரிஷி

ஸ்ரீ ஆயுர் தேவியின் மூன்றாவது வலக் கரம் அமர்ந்து அருள்புரிகின்றார் பெண்ணின் சிறப்பு
“பிரபஞ்ச வாழ்வில் பெண்களுக்கு அற்புதமான அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது, பொறுமை, அடக்கம், பணிவு இவற்றை இயற்கையிலேயே உடைய பெண்கள் கணவன்மார்களுக்கு நற்செயல்கள் புரிய உறுதுணையாக இருக்க வேண்டும்.

ஏனெனில் கணவன்மார்கள் செய்கின்ற தான தருமங்கள் போன்ற நற்செயல்களால் விளையும் புண்ணியத்தில் பாதிப்பங்கு இயற்கையாகவே அவர் தம் மனைவியர்க்கு வந்து சேர்கிறது. ”இத்தகைய அருளைப் பெண்கள் எவ்வாறு பெற்றனர்?” அதைக் கண்டு உமையம்மை, “சுவாமி! ரிஷிகளே சிவன் வேறு சக்தி வேறு என்று பிரித்துக் காட்டினால் உலக மக்கள் என் செய்வார்கள்? ஸ்ரீ தேவி உபாசனை காலப் போக்கில் அதுவும் கலியுகத்தில் மிகவும் இன்றியமையாத வழிபாடாக அமையவிருக்கிறதல்லவா? எனவே, தங்களின் ஒரு பாதியை, இடப்பாகத்தை எனக்கு தந்தருள்வீர்களாக!” என்று வேண்டினாள்.

உமையவளின் விருப்பப்படி அன்று முதல் கணவன்மார்களின் புண்ணியத்தில் பாதிபங்கு மனைவிக்கு இயற்கையாக வந்து சேரும் என்ற வரத்தையும் ஸ்ரீ பார்வதிதேவி சிவபெருமானிடமிருந்து பெற்றார்.” “தீவிர சிவ பக்தரான பிருகு முனிவர் கயிலாயத்தில் தினமும் சிவபெருமானை வலம் வந்து செல்வது வழக்கம். அவர் ஸ்ரீ ஆதிபராசக்தியான பார்வதி தேவியை வலம் வருவதில்லை.

இதை கண்டு சினம் கொண்ட ஸ்ரீ பார்வதி தேவி, பிருகு முனி வரும்போது ஸ்ரீ சிவபெருமானுடன் சேர்ந்து நின்று காட்சியளித்தாள். ஸ்ரீ அத்திரியின் பத்தினியாக படைக்கப் பெற்ற ஸ்ரீ அனுசூயா தேவி, அம் மகரிஷியின் தபோபலத்தால் பல பிராயசித்தப் பரிகாரங்களைத் தந்தருளியுள்ளனள். இல்லறம் நல்லறமாக அமைய ஸ்ரீ அத்திரி மகரிஷி தம்பதியினர் அருளியுள்ள அறவழி முறைகள் பெரிதும் பயன்படும். சண்டகள், சச்சரவுகள் இன்றி அமைதியான ஓடம்போல் வாழ்க்கைப் பயணம் அமையும். ஸ்ரீ அனுசூயா தேவியின் அற்புத தவத்தில் விளைந்த பயன்கள் இவை. இதனால் பிரபஞ்சத்திலேயே “தபோ பலனின் சிகரமாக” ஸ்ரீ அத்திரி மகரிஷி பிரகாசித்தார். அவர்தம் ஜோதி ஸ்வரூபத்தைக் கண்டு தெய்வாவதாரங்களே வணங்கி நின்றனர். ”இமாலயத் தபோபலன் பெற்றிருந்தும் ஸ்ரீ அத்திரி மகரிஷி சிஞ்சித்தும் கர்வம் கொள்ளவில்லை அன்றோ?”

அதுவும் ஸ்ரீ அனுசூயா தேவியின் பதிவிரதா தன்மையினால்தான்! விண்ணை முட்டும் தெய்வானுக்கிரகம் பெற்றிருந்தும் ஸ்ரீ அத்திரி மகரிஷி சிறிதும் கர்வம் கொள்ளாது உலகெங்கும் பெண்களின் இல்லறத்தைப் பற்றிப் பிரசாரம் செய்து “போகதா தேவி” வழிபாட்டைப் பரப்பி மக்களுக்கெனத் தம் தவத்தை அர்ப்பணித்தார்.

ஸ்ரீ பார்வதி இடபாகம் பெறல்

அத்திரி, அனுசூயா இருவரும் சிவசைலம் வந்து சேர்ந்து அங்கு தவம் புரியும் பார்வதி தேவியைக் கண்டு வணங்கினர். இறைவனின் இடப்புறம் பெறக் கிழக்கு திக்கை நோக்கியிருந்த சிவபெருமானுக்கு நைவேத்தியமிட்டு இருவரும், “இறைவா! கடுமையான நோன்பிருக்கும் ஸ்ரீ பார்வதி தேவியின் அபிலாட்சையைப் பூர்த்தி செய்து, இருவரும் கூடிய, தங்களுடைய அர்த்த நாரீஸ்வரூபத்தை அருள வேண்டும்.” என்று தியானித்து அமர்ந்தனர்.

கண் திறந்து பார்த்தால்…. நைவேத்தியமான உணவு மறைந்து விட்ட்து. கிழக்கே பார்த்து நின்ற இறைவனையும் காணோம். “கல்யாணீ! என்றழைத்தவாறே சிவபெருமான் உமையவளுக்கு இடப்புறம் தந்து மேற்கே அர்த்தநாரீஸ்வரராய் எழுந்தருளினார். எனவே ஸ்ரீ பார்வதி தேவி இடப்பாகம் பெற்ற திருத்தலம் சிவசைலமல்லவா?”, ஸ்ரீ அத்திரியும் ஸ்ரீ அனுசூயாவும் ஸ்ரீ பார்வதி நோன்பிருந்த இடத்தை வலம் வர அங்கே ஸ்ரீ ஆயுர் தேவி எழுந்தருளி, “அத்திரி மகரிஷியே! உம் பணியை மெச்சி எம் கரபீடம் அளிக்கின்றோம்! அனுசூயா! ஸ்ரீ வித்யா லோகத்தில் நீ அற்புதமான சிறப்பைப் பெறுவாயாக!” என்று அருளினள்.” கணவன் மனைவி பிரச்சனைகள் தீர இம்மஹரிஷியை வழிபட்டாளே போதும்.

நான்காவது வலகரம் ஸ்ரீகுண்டலினி மகரிஷி

ஸ்ரீ ஆயுர்தேவியின் வலதுபுறம் நான்காவது கரத்தில் அமர்ந்து அருள்புரியும் ஸ்ரீ குண்டலினி மகரிஷி இரண்டு கோடி ஆண்டுகள் தவம் புரிந்த உத்தம சித்த புருஷர் அவர். இன்றைக்குக் கலியுலகில் துர்மந்திரங்கள், துர்தேவதைகள், பில்லி, சூனியம், ஏவல், வைப்பு மந்திரங்கள், திருஷ்டி, மாய மந்திரங்கள் இவற்றால் எத்தனையோ குடும்பங்கள் அமைதியின்றி வாடுகின்றன. எதிர்வினைகளைத் தாங்குமளவிற்குப் பூஜா பலன்களை அவர்கள் பெறவில்லை. இத்தகைய தீயசக்திகளுக்கு முற்று புள்ளி வைக்கவே ஸ்ரீ குண்டலினி மகரிஷி அன்ன ஆகாரமின்றி இரண்டு கோடி ஆண்டுகள் தவம் புரிந்து ஸ்ரீ விக்ன காதினி தேவியின் தரிசனம் செய்தார்.”

ஸ்ரீ விக்ன காதினி தேவி
ஸ்ரீ விக்ன காதினி தேவி தீயசக்திகளை அழிக்கும் காளி ஸ்வரூபி தொட்டதற்கெல்லாம் கோபம் கொள்ளும் முன்கோபிகள் ஸ்ரீ விக்ன காதினியைத் தொழுதால் சினமே வராது. சினம் கொல்லும் வனமாலியவள்.” ஸ்ரீ விக்ன காதினியின் அருள் தரிசனம் பெற்ற ஸ்ரீ குண்டலினி மகரிஷி மேலும் இரண்டு கோடி ஆண்டுகள் பல லோகங்களிலும் தவம் புரிந்தவாறே ஸ்ரீ விக்ன காதினி தேவியை வழிபட்டார். அவளுடைய மகாத்மியத்தையும் பரப்பி வந்தார். இத்தகைய அதிஅற்புத தவத்தால் பிரபஞ்சமெங்கும் உள்ள தீயசக்திகள், தீவினைகள், துர்சக்திகள், துர்தேவதைகள் ஆகியவற்றை அடக்கும் தபோபலனைப் பெற்றார்.

இறுதியில் கோடிக் கணக்கான தீயசக்திகளை அடக்கியவாறு திருவக்கரையில் ஸ்ரீ வக்கரகாளி திருசன்னதியில் ஜீவசமாதி கொண்டார். பில்லி, சூனியம், ஏவல்களினால் துன்பமடைந்தோர்க்கு ஸ்ரீ குண்டலினி மகரிஷி தரிசனம் ஒரு வரப்பிரசாதமல்லவா?”

தீய சக்திகளைத் தன்னிடம் ஈர்த்து அடக்கி ஆளும் வல்லமை பெற்றவர் ஸ்ரீ குண்டலினி மகரிஷியே! பௌர்ணமியன்று அன்னம் படைத்து நைவேத்தியமிட்டு ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து ஸ்ரீ குண்டலினி மகரிஷியைத் தரிசனம் செய்தால் சிறந்த பலன்களைத் தரும்.

மந்திரவாதிகளும் பில்லி, சூன்ய, ஏவல் வைப்போர் எவரும் இத்தலத்திற்கு வருவதற்கே அஞ்சுவர். ஏனெனில் துர்சக்திகளிடமிருருந்து மக்களை விடுவித்து அற்புதமான மக்கள் சேவையைச் சிறந்த இறைப்பணியாக இன்றும் செய்து வருகிறார் .

ஸ்ரீ குண்டலினி மகரிஷி அற்புத தவத்தைப் புரிந்து அதனைத் தன்னலமின்றி மக்களின் நலனுக்காகத் தியாகம் செய்து அருள்புரியும் உன்னதமான சித்த மகரிஷி இவர்.”

தீய சக்திகள் உருவாவதன் காரணமென்ன?
துர்தேவதைகளையும் துர்சக்திகளையும் உபாசிப்பதால் கிட்டும் சக்திகளைப் பலர் தவறான முறைகளுக்கு பயன்படுத்தி மற்றவர்களுடைய சீரான வாழ்வைக் குலைக்கின்றனர். ஆனால் இறைவன் சிருஷ்டியில் காரண காரியமின்றி எதுவும் நடைபெறுவதில்லை.

சூன்ய வினைகளுக்குக் காரணம்

உயர் பதவியிலிருப்பவர்கள் வானளாவிய தம் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தல், மற்றவர்களை மிரட்டிப் பணிய வைத்து தமக்கு தேவையான, சுயநலமான வேலைகளைச் சாதித்துக் கொள்ளுதல், அதிகார தோரணையில் தவறான முறைகளில் பணம் பெறுதல், தம் அபரிமித உடல் சக்தியால் எளியவர்களை வதைத்துப் பணம் பறித்தல், பண்ணையார் தோரணையில் பிறர் உழைப்பால் பொருள் சேர்த்து அவர்கள் வாழ்க்கைக்கு உதவாமல் வாழ்தல் போன்ற பாவச் செயல்களைப் புரிவோர் அடுத்த ஜென்மங்களில் பில்லி, சூன்ய துர்சக்திகளால் அவதியுறுகின்றனர்.

இது மட்டுமல்லாது நாள், கிழமை பாராது செய்யும் சில செயல்கள் எதிர் விளைவுகளை உருவாக்குகின்றன. இவையெல்லாம் உட்பகையாக, உள்ளிருந்து வரும் தீயசக்திகளாக அமைகின்றன.

பல கோடி லோகங்களிலுமுள்ள தீயசக்திகளைத் தம் தபோபலத்தால் கட்டி வைத்து மக்களைக் காத்து திருவக்கரை ஜீவசமாதியில் அற்புத சேவையைப் புரிந்துவரும் ஸ்ரீ குண்டலினி மகரிஷி ஸ்ரீ ஆயுர்தேவியின் நான்காவது வலகரத்தில் அமரும் பாக்கியத்தைப் பெற்றார்.

ஸ்ரீ ஆயுர்தேவியின் கரத்தில் அமர்ந்துள்ள ஒவ்வொரு மகரிஷியும், சித்தரும் மக்களுடைய பலவகைப்பட்ட துன்பங்களைக் களைவதற்கெனத் தங்களுடைய தவ பலன்களை அளித்து அருள் புரிகின்றனர்.

ஸ்ரீ ஆயுர்தேவியின் திருவருள் தரிசனம் குருவருளால் அனைத்துத் துன்பங்களையும் மாய்த்து சௌபாக்கிய வாழ்வைத் தர வல்லதாகும்.

ஸ்ரீஆயுர்தேவி இடது முதல் கரம்

ஸ்ரீஅஹிர்புத்ன்ய மகரிஷி

ஸ்ரீ அஹிர்புத்ன்ய மகரிஷி ஸ்ரீ சுதர்ஸன மகாமந்திரத்திற்குரிய ரிஷியான ஸ்ரீ அஹிர் புத்ன்ய மகரிஷி காசியில் கங்கைக் கரையின் 64 விசேஷமான கரைகளில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு படித்துறையில் தம் தந்தையின் அஸ்திக் கலசத்தைத் தாங்கியவாறே தவமிருந்து “ஸ்ரீ நிதிப்ரபா” என்னும் தேவியை வழிபட்டுப் பித்ரு காரியங்களைச் செவ்வனே செய்து வந்தார்.

ஸ்ரீ நிதிப்பிரபா தேவி
ஸ்ரீ அஹிர் புத்ன்ய மகரிஷி தந்தை, தம் புதல்வன் அற்புதத் தவங்களைப் புரிந்து பல்லோக ஜீவன்களின் பித்ரு கடன்களைத் தீர்க்கும் நல்வழிகாட்டியாக, சற்குருவாக, மகரிஷியாக மலர இருப்பதைத் தீர்க்க தரிசனமாக அறிந்தார். கங்கையில் அவர் தம் உடலை உகுத்தபோது தன் புதல்வன் அஹிர்புத்ன்ய மகரிஷியிடம் ஸ்ரீ நிதிப்ரபா தேவி உபாசனைகளைக் கற்பித்து, ”அஹிர்புத்ன்யா!” ராசி-கிரக சங்கமங்களின் சூட்சுமத்தையும் தோஷ பரிகார நிவர்த்திகளையும் ஸ்ரீ நிதிப்ரபா தேவி உனக்களித்து மகிழ்வாள். அதனை மக்களுக்கு எளிதில் புரியும்படி விளக்குவாயாக” என்றார்.

அஹிர்புத்ன்ய மகரிஷி, “தந்தையே! கிரக நிலைக் கல்வி பிரபஞ்சம் போல் விரிந்ததாயிற்றே! அடியேனால் அனைத்தையும் கிரகிக்க ஆயுள் போதுமா? அதற்குரித்தான அறிவு வேண்டாமா?” என்று வினவினார். “கவலையுறாதே அஹிர்புத்ன்யா! ஸ்ரீ நிதிப்ரபா தேவியருளால் அனைத்தும் கிட்டும். என் அஸ்திக் கலசத்தைத் தாங்கியவாறு ஸ்ரீ நிதிப்ரபாவைப் பூஜித்துப் பல க்ஷேத்ரங்களுக்கும் சென்று மூர்த்தி, தலம், தீர்த்தம் யாவையும் தரிசிப்பாயாக! எங்கு என் அஸ்தி, தாமரையாக மலர்கின்றதோ அப்போதுதான் என் ஆத்மாவின் நற்கதி பூர்ணம் பெறும் என்பதையும், ஸ்ரீ நிதிப்ரபா தேவியின் அருளும் நமக்குக் கனிந்து பரிபூர்ணமடைந்தது என்பதையும் அறிவாயாக! தாமரையாக மலரும் அவ்விடமே உன்னதமான பித்ருஸ்தலம் என்பதையும் ஸ்ரீ தேவி உணர வைப்பாள்” என்றார். அன்றிலிருந்து கிரக சங்கம நிலைகளையும், தோஷ பரிகார முறைகளையும் சற்குருமார்கள், சத்சங்கங்கள் மூலமாக பரப்பி கோடி கோடியாம் ஜீவன்களின் பித்ரு கடன்களைத் தீர்க்க அருள்புரிவாயாக. கிரக சங்கம பலன்கள் அஹிர்புத்ன்ய மகரிஷி, கங்கையின் 64 கட்டங்களிலும், ஒவ்வொரு கட்டத்தின் ஒவ்வொரு படித்துறையிலும் ஓராண்டு அமர்ந்து ஸ்ரீ நிதிப்ரபா தேவியைத் தியானித்து வழிபட்டார்.

இவ்வாறு 12 ராசிகளிலும் பல கிரகங்கள் பல்வேறு நிலைகளில் சங்கமமாகும். இத்தகைய கிரக சங்கமங்களினால் நன்மைகளும் தோஷங்களும் உண்டாகும். இந்தத் தோஷங்களுக்கான பலன்களை, பரிகார முறைகளை ஸ்ரீ அஹிர்புத்ன்ய மகரிஷி வகுத்துள்ளார். இவ்வாலயத்தில் தைல அபிஷேகம் செய்து சக்கர பொங்கல் நெய்வேத்தியம் செய்தால் 9 கிரகங்களின் தார்க்கங்களில் இருந்து நமக்கு நிவர்த்தி தந்து சக்கர வியாதியிலிருந்து நம்மை காத்து அருள்பாளிக்கிறார்.

ஸ்ரீஆயுர்தேவி இரண்டாவது இடகரம்

ஸ்ரீசாரமா முனிவர்

ஸ்ரீ ஆயுர்தேவியின் இரண்டாவது இடக்கரத்தில் அமரும் பேறு பெற்ற சாரமா முனிவர்,சாரமா முனிவர் தம்முடைய ஒவ்வொரு அங்கமும் புனிதம் பெற வேண்டித் தவம் புரிந்தார். ஒவ்வொர் அங்கத்திற்குமென 1008 சஷ்டித் திதிகளில் ஸ்ரீ பாபக்னி தேவியைப் பூஜித்து உபவாசமிருந்து தேஜோமய ரூபம் பெற்றார். பல்லாயிரம் உறுப்புகளுக்காகப் பல லட்சம் சஷ்டித் திதிகளில் நோன்பிருந்த அவருடைய நகக் கண்களில்கூட ஜோதிப் பிரகாசம் தெரியும். அந்த அளவிற்குப் பாதாதி கேசமாக அனைத்து அங்கங்களாலும் இறைப்பணி புரிந்து வந்தார்.

மனிதன் தன்னுடைய அங்கங்களால் பல தவறுகளைச் செய்கின்றான். முன் ஜென்ம வினைகளுடன் இப்பிறவியில் சேர்கின்ற வினைகளும் அவனைத் துன்புறுத்துகின்றன. இதற்கானப் பிராயச்சித்தங்களைச் சாரமா முனிவர் அருளியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறோம் பிராயச்சித்தம் செய்தால் பாவங்கள் கரைவதில்லை. பிராயச்சித்தம் என்பது ஒரு தவறு செய்ததற்காக மனமார வருந்தி அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பரிகாரங்கள் செய்தலாகும். பரிகாரத்திற்குப் பின்னும் அதே தவறுகள் தொடர்ந்தால் பாவங்கள் பெருகி அதிகமாக வருத்தும். நீண்ட ஆயுளைப் பெற்றிருக்கும் மனிதன் தன் உடலிலுள்ள அனைத்து உறுப்புக்களினால் செய்யும் பாவங்களுக்கு சாரமா முனிவர் பிராயச்சித்தங்களைத் தந்துள்ளார். சாரமா முனிவர் அருளியுள்ள, அனைத்து உறுப்புக்களினால் செய்த பாவங்களுக்கான பரிகார முறைகளைக் கடைபிடித்து கோடிக்கணக்கானவர்கள் நல்வழியில் திருந்தியுள்ளனர். மகரிஷிகள் எல்லோரும் இறை நிலையைப் பரிபூரணமாக அடைந்தவர்கள்.

ஸ்ரீஆயுர்தேவி மூன்றாவது இடகரம்

ஸ்ரீஅஸ்தீக சித்தர்

நம் சித்தர் பாரம்பரியத்தில் சகல கோடி நாகலோகங்களின் நாயகராய் விளங்கும் ஸ்ரீ அஸ்தீக சித்தர் ஸ்ரீ ஆயுர்தேவியின் மூன்றாவது இடகரத்தில் அமர்ந்து அருள் பாலிக்கின்றார் “அஸ்தீக சித்தர், மனித வாழ்வின் பல்வேறு அம்சங்களில் கடைபிடிக்க வேண்டிய எளிய வாழ்க்கை முறைகளை அமைத்துத் தந்துள்ளார். சப்தமி திதியில் “ஸ்ரீ புண்ணியாதேவி” எனும் தேவியை வழிபட்டு அதிஅற்புத வரங்களைப் பெற்று அவற்றை மக்களின் தேவைக்காக அர்ப்பணித்து அருள் புரிந்து வருபவர் இவர்”

பாம்பென்றால் படையும் நடுங்கும்! இந்தப் பாம்பு விஷயத்தில் எந்த மனிதனும் அரண்டு விடுகின்றான் இதற்கு நாகபூஷணங்களின் அதிபதியாம் ஸ்ரீ அஸ்தீக சித்தர் கவசம் போல காத்தருள்கின்றார்.

“ஸ்ரீ ஆஸ்தீக சித்தாய நம” என்று ஸ்ரீ அஸ்தீகரைத் துணைக்கு அழைத்துத் துதித்தால் எத்தகைய விஷப் பாம்பும் வழிவிட்டுச் சென்று விடும் தீண்டாது பல குடும்பங்களில் நாக தோஷத்தால் பிள்ளைப்பேறு இல்லாமை, திருமணத் தடங்கல்கள் ஆகிய துன்பங்கள் தொடர்கின்றனவே! இதற்கு ஸ்ரீ அஸ்தீக சித்தர், பரிகார முறைகளை அளித்துள்ளார்.

ஸ்ரீஆயுர்தேவி நான்காவது இடகரம்

ஸ்ரீகார்க்கினி தேவி ஸ்ரீசம்வர்த மஹரிஷி

ஸ்ரீ ஆயுர்தேவியின் இடது நான்காவது கரத்தில் ஸ்ரீ கார்க்கினி தேவி என்னும் சித்தர் குல பெண் மஹரிஷியும் ஸ்ரீ சம்வர்தர் என்ற ஞானியும் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர்.ஒரு சித்தர் குலப் பெண்மணி ஸ்ரீ ஆயுர்தேவி கரபீடத்தில் அமர்ந்திருப்பது பெண்குலத்தை உயர்வடையச் செய்கிறது. “ஆண், பெண் வேறுபாடு, ஞானிகள், யோகிகள், சித்தர்கள் நிலையில் இருப்பதில்லை.

ஏன், சாதாரண மனிதனும் பல உன்னத ஆன்மீக நிலைகளை அடைய வேண்டுமெனில் ஆண், பெண் இன வேறுபாட்டைக் களைந்தாகவே வேண்டும். அங்கமும் அழகும் ஆண், பெண்ணினத்தைப் பிரித்துக் காட்டுவது விஞ்ஞானப் பூர்வத் தத்துவம். ஆனால் ஆன்மீகத்தில் ஆண்,பெண் விளக்கம் வேறுபடுகிறது. இங்குதான் சக்தி தத்துவம் நடைமுறைக்கு வருகிறது.

ஸ்ரீ கார்க்கினியான பெண் துறவி ஸ்ரீ கார்க்கி என்றும் அழைக்கப்படும் இவர் அஷ்டமி திதி தோறும் ஸ்ரீ பிரம்ம சாரிணி என்னும் தேவியை துதித்துப் பேரருளைப் பெற்ற சித்த தேவியிவள். அவதார புருஷர்கள் கூட நாகதேவியின் பரிபூரண அருளைப் பெற்றதில்லை. ஆனால் கார்க்கினி, ஸ்ரீ பிரம்ம சாரிணி தேவிக்குரிய சகலகோடி நாகதேவதைகளையும் உபாசித்து அவற்றிண் அருளைப் பெற்றவளாவாள். ஸ்ரீ கார்க்கினி தேவி பெண்குலத்தார் அனுபவிக்கும் துன்பங்களுக்காக நிவர்த்தி முறைகள் தேடிப் பலகோடி ஆண்டுகள் ஒரு துளி பால் மட்டுமே அருந்தி தவமிருந்தாள். ஸ்ரீ கார்க்கினி தேவியே, கார்க்கி சந்நியாஸினி, கார்க்கி பிரம்மசாரிணி தேவி என்றும் பல நாமங்களில் அழைக்கப்படுகிறாள். தாம் வழிபட்ட தேவியான ஸ்ரீ பிரம்மசாரிணி தேவியின் திருநாமத்தோடு கூடி ஸ்ரீ கார்க்கினி பிரம்மசாரிணி என்ற சித்தஞானியாய் அழைக்கப்படுகிறாள்.