அனைத்து ஆலயங்களிலிலும் கலச பூஜைகள் செய்வதை நாம் பார்த்திருப்போம். ஹோமம் செய்யும் நேரத்தில் கூட கலச பூஜை முடித்த பிறகு தான் ஹோமம் துவங்குவதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த ஹோம கலசத்தில் எந்த தெய்வத்தை பிரதானமாக கொண்டு ஹோமம் செய்ய இருக்கிறார்களோ அந்த தெய்வத்தை அந்த கலசத்தினுள் ஆவகானம் செய்து ஹோமம் முடித்த பிறகு தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வதை நாம் கண்டு இருக்கிறோம். அதேபோல் நமது தாந்தோன்றி ருத்ர ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் கலசமே ஆரத்தியாக அமைத்து பாபாவிற்கு காட்டப்படுகிறது.

கலச ஆரத்தி எதற்காக பாபாவிற்கு இங்கு எடுக்கப்படுகிறது ?


எங்குமே இல்லாத வகையில் நமது ஆலயத்தில் சத்குரு ஸ்ரீ சீரடி சாய்நாதருக்கு கலசத்தின் மேல் ஆவுடை அமைக்கப்பட்டு ஆவுடை உள்ளே சிவனின் அம்சமான ருத்ராக்ஷ திரியில் சிவபெருமானை ஜோதி சுவரூபமாக தரிசிக்கும் பாக்கியத்தை சத்குரு சாய்நாதர் இங்கே அருளியிருக்கிறார். இக்கலசத்தின் உள்ளே எந்திர வடிவில் அஷ்ட தேவதைகளை ஆவகானம் செய்து மூலிகை அஞ்சனத்தின் மூலம் பந்தனம் செய்யப்பட்டிருக்கிறது.