சாகம்பரி தேவி

சாகம்பரி தேவி சாகம்பரி தேவி

ஆதியும் அந்தமுமாய் விளங்குபவள் நமது சாகம்பரி தேவி. பஞ்சங்களை போக்கி, மனிதர்களின் நிலையை மாற்றி தருபவள். ஆயிரம் கண்ணுடையாள் என்று மற்றொரு திருநாமம் சூடியவள். அம்பிகைக்கு அங்கத்தில் வஸ்திரம் சாற்றிய இடம் தவிர்த்து மற்ற இடங்களில் கண்கள் இருக்கும் அவளின் திருக்கோளத்தை காணலாம். துர்முகன் என்னும் கொடிய அசுரன் பிரம்ம தேவரை நோக்கி கோர தவம் இருந்தமையால் அவன் ஆசைக்கிணங்க பிரம்ம தேவர் வரம் அளிக்க, மூவுலகத்தில் உள்ள வேதங்களை கவர்ந்து சென்றான். இந்த வரத்தின் விளைவால் உலக மக்கள் அனைவரும் பித்து நிலையை அடைந்தனர்.

துர்முகன் என்னும் அசுரன் மூவுலகையும் எளிதில் கைப்பற்றி ஆட்சிபுரிந்தான். இதை பார்த்த சில பிராமணர்கள் சில தவோஸ்தவர்கள், ஞானிகள் இமயமலை சென்று அம்பிகை நோக்கி கோர தவம் செய்தார்கள். அவர்களது தவத்தை ஏற்றுக்கொண்டு அம்பிகை அவர்கள் முன்னால் ஒளி பிளம்பாய் காட்சி தந்தாள். கண்கள் பார்க்கும் வண்ணம் ஒளி விலகிய பிறகு அம்பிகை அங்கம் முழுவதும் கண்ணாய் தெரிந்தது. அந்த 1000 கண்களினால் உலகில் உள்ள தனது பக்தர்கள் படும் இன்னல்களையும் துயரங்களையும் கண்டு அம்பிகை வருத்தம் கொண்டாள்.

இதன் விளைவாக வெளிவந்த கண்ணீர் துளிகளே அமிர்த மழையாய் பெய்து வயல்வெளிகளையும் நதிகளையும் செழிக்க வைத்தது. இந்த அமிர்தத்தை பருகியவர்கள் பித்து நிலையிலிருந்து விலகி தன்னிலை அடைந்தனர். பஞ்சத்தை போக்கி நாட்டைச் செழிக்கவைத்ததால் சாகம்பரி என்ற நாமம் கொண்டால். இதை கேள்வியுற்ற துர்முகன் அம்பிகையுடன் நேருக்கு நேர் 11 நாள் யுத்தம் புரிந்தான். யுத்தத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் காணாதமையால் அம்பிகையின் திருமேனியிலிருந்து தசமகா வித்தை எனப்படும் 10 தேவியர் வெளிப்பட்டனர். இதன் விளைவால் அம்பிகையை நாம் சதாக்ஷி என்ற நாமத்தில் அழைக்கிறோம். தாந்திரீகத்தாலும், மாந்திரீகத்தாலும் வழிபடக்கூடிய 10 தேவியர்களின் உதவியால் துர்முகனை அம்பிகை வென்றாள்.

வழிபடக்கூடிய 10 தேவியர்
காளி பரம்பொருளின் இறுதி வடிவம். காலத்தின் வடிவானவள்.
தாரா வழிகாட்டியாகவும், பாதுகாவலியாகவும் விளங்கும் தெய்வம்,மோட்சத்தை தரும் பேரறிவை வழங்கும் 'நீல தெய்வம்' எனும் பெருந்தெய்வமும் இவளே.
திரிபுரசுந்தரி மூவுலகிலும் பேரழகி! தாந்திரீக நெறியின் பார்வதி, 'மோட்சமுக்தி' என்றெல்லாம் போற்றப்படுபவள்
புவனேஷ்வரி பிரபஞ்ச வடிவமாய் திகழும் அன்னை வடிவம்
பைரவி அஞ்சத்தகும் அன்னையின் வடிவம்.
சின்னமஸ்தா தன் தலை தானே அரிந்த தியாகத் திருவுருவம்.
தூமாவதி வெற்றியை தரவல்லவள்
பகளாமுகி எதிரிகளை அடக்கியாளும் தேவதை
மாதங்கி தனத்தை ஈர்த்துக்கொடுப்பவள்
கமலை தாந்திரீக நெறியின் திருமகள்.

நமது ஆலயத்தில் உள்ள அம்பிகையின் திருக்கோலமானது நின்ற வடிவில் 3 நெற்றிக் கண்ணுடன் வஸ்திரம் தரித்த இடம் தவிர்த்து மற்ற இடங்களில் கண்கள் வெளிப்படுமாறு காட்சி தருகிறாள். இருகரங்களில் பழங்களையும், தானியங்களையும் வைத்து மூன்றாவது கரத்தில் கமலத்தையும், நாங்காவது கரத்தில் தனுரையும் வைத்துள்ளாள். சங்கு சக்கர தாரணியான நமது சாகம்பரியை முன்னோர்கள் தொன்றுதொட்டு விஷூ திருனாளில் அனைத்து கோவில்களில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு காய்கரிகளில் அலங்காரம் செய்வார்கள். அந்த அலங்காரத்தின் பெயர் சாகம்பரி அலங்காரம். அனைத்து ஆலயத்திலும் காய்கரி அலங்கார ஸ்வரூபினியாக மட்டுமே இந்த அம்பாளை தரிசனம் செய்கிறோம். ஆனால் இங்கு தாந்தோன்றி ருத்ர ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் அம்பிகையை நின்றிருக்கும் திருக்கோலத்தில் நாம் தரிசிக்கிறோம். அம்பிகையின் வரலாறை உலகிற்கு எடுத்துரைத்த வேதங்களின் தலைவரான வேதவியாசருக்கு இங்கு கல் விக்ரஹம் பிரதஷ்டை செய்யப்பட உள்ளது.

இவ்வாலயத்தில் சாகம்பரி தேவிக்கு எவர் ஒருவர் மூலிகை செய்யப்பட்ட அமிர்தத்தை கொண்டு அபிஷேகம் மற்றும் காய்கறி, பழங்களை கொண்டு நெய் வேத்தியம் செய்து வரும் பக்தர்களுக்கு தருகிறார்களோ அவர்களின் நிலைத்தன்மையை மாற்றி அவர்களது தலைமுறையினருக்கு என்றென்றும் பஞ்சமில்லா வாழ்வைத்தருகிறாள் அன்னை சாகம்பரி தேவி.