பரிமளத்தூண்

பரிமளம் என்றால் சுகந்தம். சுகந்தம் என்றால் வாசனை. ஒருமுறை குருவின் சந்தேகத்தை தீர்த்து புதிய பரிமள சுகந்த பாஷையே எழுதியதால் ராகவேந்திரருக்கு பரிமளாச்சாரியார் என்ற பட்டம் அவரது குருவால் சூட்டப்பட்டது.

நமது தாந்தோன்றி ருத்ர ஸ்ரீ ஷிரடி சாய்பாபா ஆலயத்தில் மக்களின் மனத்துயரையும், மனக்கவலையையும் போக்கும் வகையில் அபூர்வ மூலிகை மரத்தினால் 3 அடி ஆழத்தில் சுதர்சன சக்கரத்துடன் பெருமாளுக்கு உகந்த பொருட்களை உள்ளே வைத்து ஈயத்தகடுடன் பிரதஷ்டை செய்யப்பட்டுள்ளது. பரிமளத்தூண் முழுக்க சித்தர்களுடைய அபூர்வ எந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எந்திரங்கள் பக்தர்களின் பார்வைக்காக 11/2 மாதம் வைக்கப்பட்டிருந்தது. பரிமளத்தூணின் மேற்புரம் அத்திமரத்தால் ஆன சக்கரத்தாழ்வார் மற்றும் லட்சுமி ஐயகிரீவர் பிரதஷ்டை செய்யப்பட்டுள்ளனர். பரிமளத்தூணிற்க்கு மனிததத்துவங்கள் ஆறின் எடுத்துக்காட்டாக செப்புகவசம் போடப்பட்டுள்ளது. மேல்புறம் கவசத்தில் அபூர்வ மூலிகைகளும், ரத்தினத்தையும், உபரத்தினத்தையும் கொண்டு சக்கரத்தாழ்வார் மற்றும் லட்சுமி ஐயகிரீவர் பிரதஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிமளத்தூணை அனைத்து நம் அனைத்து குறைகளையும் சொல்லும்போது நம் மனதில் உள்ள வலி வேதனைகளை போக்கி மன நிம்மத்தியையும், மன சந்தோஷத்தையும் கிடைக்கபெறுகிறது. உலகத்தில் எங்கு தேடினாலும் இந்த பரிமளத்தூண் காண கிடைக்காத அரிய பொக்கிஷம்.

சக்கரத்தாழ்வார்

சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்படுகிறார். இவர் சுதர்சனம், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சிய இடங்களில் முப்பத்திரண்டு கைகளை அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது. சக்கரத்தாழ்வார், சுதர்சனர், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சனாழ்வான், திருவாழி ஆழ்வான் என்று பல்வேறு நாமங்களால் போற்றப்படும் சுதர்சன சக்கரமே சக்கரத்தாழ்வாராகும்.

மஹாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள், திவ்ய தேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் காட்சியளிப்பார். 'சங்கொடு சக்கரம் ஏந்திய தடக்கையன்' என்று திருப்பாவையில் திருமாலை பாடுகிறார் ஆண்டாள்.

திருமாலை எப்போதும் தாங்கிகொண்டிருக்கும் ஆதிசேஷனை அனந்தாழ்வான் என்றும், வாகனமான கருடனை கருடாழ்வார் என்றும், நம்மாழ்வார் ஞானம் பெற்ற புளிமரத்தை திருப்புளியாழ்வான் என்றும், மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களில் முதன்மையான சக்கரத்தை திருவாழி ஆழ்வான் எனும் சக்கரத்தாழ்வான் என வைணவ சாஸ்திரங்களும், சில்பரத்தினம் என்ற நூலும் தெரிவிக்கிறது.

பெருமாள் கோவில்களில் எட்டு கரங்கள் கொண்ட சுதர்சனரையும், 16 கரங்கள் கொண்ட மூர்த்தியையும், 32 கரங்கள் கொண்ட மகா சுதர்சனரையும் காணலாம். பொதுவாக, 8 அல்லது 16 கரங்களுடன் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் அறுகோண சக்கரத்தில் சக்கரத்தாழ்வார் காட்சி தருவார். 'ஷர்கோண சக்கரம்' என்னும் ஆறுகோணத்தின் மத்தியில் உக்கிர வடிவ சுதர்சனரும், 'திரிகோண சக்கரம்' எனும் முக்கோணத்தில் யோக நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர்.

சுதர்சனர் தனது திருக்கரங்களில் சக்கரம், முழு, ஈட்டி, தண்டு, அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என 16 கைகளில் 16 வகையான ஆயுதங்களுடன் மகா சுதர்சன மூர்த்தியாக காட்சி தருகிறார். சுதர்சனர் வழிபாடு மிகவும் சிறப்பானதாக கூறப்படுகிறது. அழிக்க முடியாத பகையை அழித்து, நீக்க முடியாத பயத்தை நீக்க வல்லவர் சுதர்சன மூர்த்தி. மனிதனுக்கு பெரும்பாலான பாதிப்புகளுக்கு மூல காரணமாக இருப்பவை ருணம், ரோகம், சத்ரு எனப்படும் கடன், வியாதி, எதிரி ஆகியவைதான். அவற்றை அழித்து மன அமைதியை தருகிறர் சுதர்சன மூர்த்தி. கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி யோகத்தை அருள்வார்.

கெட்ட கனவுகள், மன சஞ்சலம், சித்த பிரமை, பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் போன்ற மனம் தொடர்பான பாதிப்புகள், தொந்தரவுகளில் இருந்தும் விடுபடச் செய்வார். ஜாதகத்தில் 6,8,12ம் அதிபதிகளின் திசைகள், புதன், சனி திசை நடப்பவர்கள் ஸ்ரீ சுதர்சனரை வழிப்பட்டால் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம். புதன், சனி கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி சாற்றி, துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 முறை வலம் வந்து வழிப்பட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும். நம்மை சூழ்ந்த்திருக்கும் துன்பங்கள், தடை, தடங்கல்கள் எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும்.

பெயர் விளக்கம்

சக்கரத்தாழ்வாரை சக்கரத்தான் என்றும் கூறுவர். ஆழ்வார்கள் இவரை திருவாழியாழ்வான் என்கின்றனர். பெரியாழ்வார் சக்கரத்தாழ்வாரை சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு என்று வாழ்த்துகிறார்.

சுவாமி தேசிகன் என்பவர் சக்கரத்தாழ்வரை சக்ர ரூபஸ்ய சக்ரிண என போற்றுகிறார். இதற்கு திருமாலுக்கு இணையானவர் என்று பொருளாகும். அத்துடன் சுவாமி தேசிகன் சுதர்சனாஷ்டகம் என்ற நூலினையும் சக்கரத்தாழ்வாரைப் போற்றி எழுதியுள்ளார்.

சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள்

வலக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள்

  • 1.சக்கரம்
  • 2.மால்
  • 3.குந்தம்
  • 4.தண்டம்
  • 5.அங்குசம்
  • 6.சதாமுகாக்கனி
  • 7.மிஸ்கிரிசம்
  • 8.வேல்

இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள்

  • 1.பாஞ்ச சண்யம்
  • 2.சாரங்கம்
  • 3.பாசம்
  • 4.கலப்பை
  • 5.வஜ்ராயுதம்
  • 6.கதை
  • 7.உலக்கை
  • 8.திரிசூலம்

ஹயக்ரீவர்

ஹயக்ரீவரிடமிருந்து வேதங்களை பெறும் பிரம்மா

அதிபதி ஞானம்
தேவநாகரி ஹயக்ரீவர்
சமசுகிருதம் விஷ்ணு
வகை திரிமூர்த்தி
இடம் வைகுண்டம்
கிரகம் ைகுண்டம்
ஆயுதம் சுதர்சன சக்கரம், கௌமோதகி
துணை லட்சுமி

பொருளடக்கம்

  • 1. அவதாரக் காரணம்
  • 2. லட்சுமி ஹயக்ரீவர்
  • 3. ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்
  • 3.1. ஹயக்ரீவர் காயத்திரி
  • 4. ஸ்ரீவாதிராஜரும் ஹயக்ரீவரும்

ஹயக்ரீவர் குதிரை முகமும், மனித உடலும் கொண்ட உருவானவர், இவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவரை கல்வித் தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை.

அவதாரக் காரணம்

மது, கைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்த வேதங்களை பறித்துக் கொண்டனர். அத்துடன் பாதாள உலகத்திற்குச் சென்றனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார். மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர். அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார். இந்த ரூபமே ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறது. அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.

லட்சுமி ஹயக்ரீவர்

மது, கைடபன் அசுரர்களை அழித்த பின்னும் ஹயக்கிரீவருக்கு உக்கிரம் தனியாதால் லட்சுமி தேவியை அவர் மடியில் அமர வைத்துள்ளனர். இத்திருவுருவத்திற்கு லட்சுமி ஹயக்ரீவர் என்று பெயர். ஹயக்ரீவருக்கு கல்வி கருவாக இருந்தமையால் கல்விக்கு தெய்வமாகவும், லட்சுமி உடனிருப்பதனால் செல்வத்திற்கு தெய்வமாகவும் ஹயக்கிரீவர் வணங்கப்படுகிறார்.

ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்

தூய மெய்ஞ்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையானவரும் அறிவு யாவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்கிரீவரை வணங்குகிறேன் எனும் பொருளுடைய ஸ்தோத்திரம். "ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே"

ஹயக்ரீவர் காயத்திரி

'ஓம் தத் வாகீச்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி தந்நோ ஹஸெள ப்ரஸோதயாத்'
மூலமந்திரம்
'உத்கீத ப்ரணவோத்கீத, ஸர்வ வாகிச்வரேச்வர ஸர்வ வேதமயா சிந்த்யா, சர்வம் போதய போதய'
ஓம்கார உத்கீத ரூபாய ருக்யஜீ ஸாம மூர்த்தயே நம: அஸ்து தேவதேவாய வாஞ்சிதார்த்த ப்ரதாயினே: வேத வேதாந்த வேத்யாய வேதாஹரணே கர்மணே ஸர்வாஸ்த்வ மஹாமோஹ பேதினே ப்ரஸ்மணே நம:

ஸ்ரீவாதிராஜரும் ஹயக்ரீவரும்

கி.பி. 1480 ஆண்டு காலத்தில்[4] வாழ்ந்த மத்வ குருவான மகான் ஸ்ரீவாதிராஜர், ஹயக்ரீவரை உபாசனைத் தெய்வமாகக் கொண்டவர். அவர் தினமும் ஹயக்ரீவருக்கு படைக்கும் பிரசாதத்தை ஹயக்ரீவரே வந்து உண்பாராம்.