ஒரு மனிதனின் துன்பத்திற்கு காரணம் அவன் தெரிந்தோ அல்லது தெரியாமலோ முற்பிறவியில் அல்லது இப்பிறவியில் செய்த பாவங்கள் மற்றும் பிறர் கொடுக்கின்ற சாபமே காரணமாக அமைகிறது. அதுமட்டுமின்றி நவகிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள், கண்டங்கள், செய்வினை சம்பந்தமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டு என்னிலடங்கா துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் அவர்களது கருமவினையே காரணமாக அமைகிறது.

நமது ஆலயத்தில் வியாழன் அன்று கூட்டு பிரார்த்தனை முடிந்த பின்னர் கருமவினை நிவர்த்தி, கிரக தோஷ நிவர்த்தி மற்றும் எப்பேற்பட்ட தோஷமாக இருந்தாலும் 9 வியாழக்கிழமை பூஜையில் கலந்து கொள்ளும்பொழுது சாய்பாபா நிவர்த்தி செய்து தருகிறார். இப்பூஜை பாபா அவர்களது தொண்ணூற்று ஒன்பதாவது மகாசமாதி பூஜை விழா அன்றிலிருந்து அவரது உத்தரவின் பேரில் பக்தி சிறத்தையுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.